சிறுமியின் உதட்டை அழுத்துவது பாலியல் வன்கொடுமை அல்ல! டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: சிறுமியின் உதட்டை அழுத்துவது பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 12 வயது சிறுமியின் உதட்டை அழுத்துவதில் வெளிப்படையாக எந்த பாலியல் நோக்கமும் இல்லாத நிலையில் அதை குற்றமாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை நீதிபதி ஸ்வர்ணா காந்த ஷர்மா விசாரித்தார். டெல்லியில் 12 வயது சிறுமி, இவரை 4 வயதிலேயே இவரது தாயார் விட்டுச் சென்றுவிட்டார். இந்த நிலையில் தனது பாட்டி வீட்டிற்கு 4 நாட்கள் விடுமுறைக்காக சென்ற போது தந்தை வழியை சேர்ந்த உறவினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் அந்த சிறுமியின் உதட்டை அழுத்தியதுடன் அருகே படுத்து உறங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் நோக்கத்துடன் அவரின் உதட்டை அழுத்தியதாகவும் அவருடன் படுத்து உறங்கியதாகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதை எதிர்த்து சிறுமியின் உறவினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணா காந்த ஷர்மா விசாரித்தார். அப்போது 354 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ததை உறுதி செய்தார்.
அதே வேளையில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான குற்றச்சாட்டில் இருந்து அந்த உறவினரை விடுவித்தும் உத்தரவிட்டார். இதனால் எதிர் தரப்பினர் அதிர்ச்சி அடைந்த போது நீதிபதி கூறுகையில், ஒரு பெண் குழந்தையின் உதடுகளைத் தொட்டு அழுத்தும் செயல், இந்திய தண்டனை சட்டம் 354 -ன் கீழ் குற்ற வரம்பிற்குள் வருகிறது.
குறைந்தபட்ச தொடுதல் இருந்தாலே இந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். அதே நேரம் போக்சோ சட்டப்பிரிவு 10 இன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றால் பாலியல் நோக்கத்துடன் அந்த உறவினர் சிறுமியை அணுகியிருக்க வேண்டும்.
ஆனால் அவர் அப்படி நடந்து கொண்டதாக சிறுமி தனது புகாரில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை அழுத்துவது, அருகில் படுத்து உறங்குவது வன்கொடுமை இல்லை. எனவே அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை (போக்சோ) வழக்கு பதிவு செய்ய முடியாது.
இது போன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளை விசாரிக்கும் போது விசாரணை நீதிமன்றம் அதிக கவனம் கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக ஏனோதானோவென 4 வரிகளில் எல்லாம் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி கடிந்து கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில் பாலியல் கண்ணோட்டத்துடன் ஒரு சிறிய செய்கை செய்தாலும் அது பாலியல் குற்றமாகும். ஆனால் இந்த விவகாரத்தில் அது போன்றதொரு எந்த முகாந்திரமும் இல்லை. அது போன்று அவர் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி தனது வாக்குமூலத்தில் எங்கேயும் தெரிவிக்கவில்லை என நீதிபதி தெரிவித்திருந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications