வரலாற்றில் முதல் முறை.. கிருஷ்ண ஜென்ம பூமி செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி.. உச்ச கட்ட பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமிக்கு இன்று செல்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் கிருஷ்ண ஜென்ம பூமிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமரின் வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் மதுரா நகரத்தில் கிருஷ்ண ஜென்மபூமி உள்ளது. இந்து மக்களின் புனித இடமாக கருதப்படும் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் உலகப் புகழ் பெற்றது ஆகும். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்து வருகின்றனர். யமுனை ஆற்றங்கரையில் அமைந்து இருக்கும் மதுரா நகரம் முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

Prime Minister Modi To Make Historic Visit To Birthplace Of Lord Krishna in Mathura

பிரசித்தி பெற்ற கிருஷ்ண ஜென்மபூமிக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். கிருஷ்ண ஜென்ம பூமிக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். மதுரா நகரில் 3 மணி நேரம் பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடியை நேரில் சென்று வரவேற்க உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அங்கு சென்றுள்ளார்.

அயோத்யா மற்றும் காசியை தொடர்ந்து மதுராவிற்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு மதுரா வருகை தரும் மோடி, 6.15 மணியளவில் கிளம்புவார் என்று தெரிகிறது. அதேபோல், பிரதமர் மோடி சந்த் மிராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பின்னர் பிரஜ் ராஜ் உத்சவ் ரயில் மைதானத்தில் பிரதமர் மோடி சுமார் 40 நிமிடங்கள் உரையாற்ற உள்ளார்.

மீராபாயின் 525-வது பிறந்தநாளை முன்னிட்டு 5 நிமிட ஆவணப்படத்தையும் பிரதமர் மோடி பார்க்க உள்ளார். மீரா பாயின் நினைவாக நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். மீராபாய் விழா நவம்பர் 23 முதல் 25 வரை பிரஜ் ராஜ் உத்சவின் போது மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வருகையை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் உத்தர பிரதேச போலீசார் சுமார் 4 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் மதுரா வருகையை ஒட்டி அந்த நகரில் பாஜகவினரும் திரண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+