டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி.. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Google Oneindia Tamil News

டெல்லி: மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காந்திய சிந்தனை உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்,

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Prime Minister Narendra Modi and President Ram Nath Kovind expresses gratitude to Gandhi Jayanti

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காந்தி ஜெயந்தி நாளில் நாம் மகாத்மா காந்தியை நேசிக்கிறோம். வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும். உண்மை, அகிம்சை மற்றும் அன்பு பற்றிய காந்தியின் சிந்தனை சமூகத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்குகிறது என்றார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,காந்திய சிந்தனை உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது, மகாத்மா காந்தி மனிதகுலத்திற்கு உத்வேகம் அளிப்பவர் என கூறியுள்ளார்.

இதனிடையே மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

English summary
We bow to beloved Bapu on Gandhi Jayanti. There is much to learn from his life and noble thoughts. May Bapu’s ideals keep guiding us in creating a prosperous and compassionate India: Prime Minister Narendra Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X