பதவியேற்ற முதல் நாளிலேயே அவசர நிலை பிரகடனத்துக்கு எதிரான தீர்மானம்- ஓம் பிர்லாவுக்கு மோடி பாராட்டு!
டெல்லி: லோக்சபா சபாநாயகராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே அவசர நிலைப் பிரகடனத்துக்கு எதிராக ஓம் பிர்லா தீர்மானம் நிறைவேற்றியதற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை லோக்சபா வன்மையாக கண்டனம் செய்கிறது., எமர்ஜென்சியை எதிர்த்து போராடி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த அனைவரின் உறுதியையும் பாராட்டுகிறோம் என ஓம் பிர்லா தமது தீர்மானத்தில் தெரிவித்திருந்தார்.
18-வது லோக்சபாவின் சபாநாயகராக ஓம் பிர்லா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

இதன் பின்னர் சபாநாயகர் ஓம் பிர்லா அவசர நிலை பிரகடனத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றை வாசித்தார். அதில், 1975-ல் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை லோக்சபா வன்மையாக கண்டனம் செய்கிறது., எமர்ஜென்சியை எதிர்த்து போராடி நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாத்த அனைவரின் உறுதியையும் பாராட்டுகிறோம் என ஓம் பிர்லா தமது தீர்மானத்தில் தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த தீர்மானத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். ஓம் பிர்லாவின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: அவசர நிலையை வன்மையாகக் கண்டித்துள்ள மக்களவைத் தலைவர், அந்த நேரத்தில் நடந்த அத்துமீறல்களையும், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட விதத்தையும் எடுத்துக்காட்டியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் மௌனம் அனுசரித்தது ஓர் அற்புதமான செயலாகும்.
50 ஆண்டுகளுக்கு முன் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும். ஏனெனில் அரசியல் சாசனம் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது, பொதுமக்களின் கருத்து நசுக்கப்பட்ட போது, நிறுவனங்கள் அழிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதற்கு இது ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ஆகும். அவசர நிலையின் போது நடந்த சம்பவங்கள் ஒரு சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் ஆகும் என தெரிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications