டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயேசு கிறிஸ்துவின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூருகிறோம்.. பிரதமர் நரேந்திர மோடி ட்விட்

Google Oneindia Tamil News

டெல்லி : இன்று புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூருகிறோம் எனவும், சேவை மற்றும் சகோதரத்துவம் பற்றிய அவரது இலட்சியங்கள் பல மக்களுக்கு வழிகாட்டி வெளிச்சம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கிறிஸ்துவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியதை தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது.

18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?

30 நாட்களாக விரதம் இருந்த கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட நாளினை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.

புனித வெள்ளி நிகழ்வு

புனித வெள்ளி நிகழ்வு

அதனை தொடர்ந்து புனித வெள்ளி இன்று நடைபெற்றது. இதையொட்டி உலகெங்கிலும் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. ஏசுபிரானின் தியாகத்தை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

சிலுவைப்பாதை நடைபெற்ற பேரணியில் இயேசு பிரான் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின் தொடர்ந்து சென்று சிலுவைப் பாதை பாடுகளை நினைவு கூறும், வகையில் தமிழகத்தில் உள்ள நகரங்களில் முக்கிய வீதிகளின் வழியாக பேரணி நடைபெற்றது.

சிறப்பு பிரார்த்தனை

சிறப்பு பிரார்த்தனை

இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் தேவாலயங்களில் அதிகாலை முதல் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளிலும் மக்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். புனித வெள்ளி கிறிஸ்தவ மக்களின் துக்க நாளாகவும், இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக் கிழமை மகிழ்ச்சியான நாளாகவும் கருதப்படுகிறது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்நிலையில் புனித வெள்ளியையொட்டி இயேசு கிறிஸ்துவின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூருகிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று புனித வெள்ளியில் இயேசு கிறிஸ்துவின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூருகிறோம். சேவை மற்றும் சகோதரத்துவம் பற்றிய அவரது இலட்சியங்கள் பல மக்களுக்கு வழிகாட்டி வெளிச்சம்." என பதிவிட்டுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi today said that on Good Friday we commemorate the courage and sacrifice of Jesus Christ and that his ideals of service and brotherhood are a guiding light for many.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X