நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்காதீங்க..பிரதமர் மோடி பெற்றோர்களுக்கு கொடுக்கும் அட்வைஸ்..!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது, குழந்தைகள் தங்கள் சொந்த கனவுகளைப் பின்பற்றுவது முக்கியம் என தேர்வுவெழுதும் மாணவர்களுடனான கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடும் பரிக்சா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி நடத்தது.

டெல்லியில் உள்ள தல்கடோரா ஸ்டேடியத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடினார். கலந்துரையாடலுக்கு முன்பாக அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் கண்காட்சிப் பொருட்களை அவர் பார்வையிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநில ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் காணொளி காட்சி முறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்காண மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, " மாணவர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் பண்டிகைக் கால மனநிலையில் தேர்வுக்கு வர வேண்டும் தொழில்நுட்பத்தை ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள், சவாலாக அல்ல என்றார்.

தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கைக்கான கலந்தாய்வு முழுமையானது. இது குறித்து இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது எனவும், 20ஆம் நூற்றாண்டின் கல்வி முறை மற்றும் கருத்துக்கள் 21ஆம் நூற்றாண்டில் நமது வளர்ச்சிப் பாதையை தீர்மானிக்க முடியாது. காலத்திற்கேற்ப நாம் மாற வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளை மாணவர்களிடம் திணிக்க கூடாது,
குழந்தைகள் தங்கள் சொந்த கனவுகளைப் பின்பற்றுவது முக்கியம்

சிறப்புத் தலைமுறை மாணவர்கள்

சிறப்புத் தலைமுறை மாணவர்கள்

ஊக்குவிப்பதற்கான ஊசியோ சூத்திரமோ தற்போது வரை உலகில் இல்லை, அதற்குப் பதிலாக, உங்களை நன்றாகக் கண்டறிந்து, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்பதைக் கண்டறியவும், அதில் வேலை செய்யும் நீங்கள் ரசிக்கும் விஷயங்களைச் செய்யுங்கள், அப்போதுதான் அதிகபட்ச பலனைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு சிறப்புத் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆம், போட்டி அதிகம் ஆனால் வாய்ப்புகளும் அதிகம். பெண்குழந்தைகள் குடும்பத்தின் பலம். வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் நமது பெண்கள் சக்தி சிறந்து விளங்குவதைப் பார்ப்பதை விட வேறு என்ன இருக்க முடியும்.

தமிழக மாணவர்கள் பேச்சு

தமிழக மாணவர்கள் பேச்சு

மற்றவர்களிடம் உள்ள குணங்களைப் பாராட்டி அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுடன் இணைந்திருக்கும்போது உங்கள் கனவுகளை பார்க்கிறேன், அதற்கேற்ப என் வாழ்க்கையை வடிவமைக்கவும் முயற்சிக்கிறேன்", என பிரதமர் பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அருகே சின்ன வேப்பநத்தம் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ- மாணவிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+