நல்ல சந்தர்ப்பம்..! சமூகத்தில் ஒற்றுமை சகோதரத்துவம் மேம்படுத்தட்டும்..! பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து
டெல்லி : ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நல்ல சந்தர்ப்பம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தட்டும் எனவும், அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும் பிரதமர் வெளியிட்டுள்ள ரம்லான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், 30வது நாளில் பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
அதிகாலை முதல் மாலை நோன்பு முடியும் வரை தண்ணீர் கூட அருந்தாமல் மிக கடுமையான நோன்பினை இஸ்லாமிய மக்கள் கடைபிடித்து, மாலை தொழுகைக்குக் பிறகே மீண்டும் உணவருந்துவது வழக்கம்.

ரமலான் பண்டிகை
அந்த வகையில், வானில் முதல் பிறை கடந்த மாதம் 2ஆம் தேதி தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கியது . இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு பண்டிகை 3ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்படும் என தலைமை காஜி தெரிவித்தார்.

இஸ்லாமிய மக்கள்
இதனையடுத்து நோன்பினை தீவிரமாக கடைபிடித்த இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் முக்கிய கடைமையினை ஆற்றினர். இந்நிலையில் நேற்று பிறை தென்பட்டதையடுத்து இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

சிறப்பு தொழுகை
கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு தொழுகை நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
Recommended Video

பிரதமர் வாழ்த்து
இந்நிலையில் ரமலான் பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "ஈத்-உல்-பித்ர் நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல சந்தர்ப்பம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications