பிரளயமாகும் மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதங்கள்- சோனியா, ராகுலுக்கு சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி வைஷ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினாவுக்கு எழுதிய கடிதங்கள் விவகாரங்கள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதங்களை மத்திய அரசின் பிரதமர்களின் அருங்காட்சியம் மற்றும் நூலகத்திடமே சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதங்களை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தி, பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார். மொத்தம் 51 கடிதங்களை சோனியா பெற்றுக் கொண்டார். அதில் எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதங்களும் அடக்கம்; அதே போல சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு எழுதிய கடிதங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

congress nehru

தற்போது மத்திய அரசின் பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகமானது இந்த கடிதங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சோனியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி சம்பித் பத்ரா, எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதங்களில் என்ன இருந்தது என்பது பற்றி இந்திய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்; அதேபோல ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு எத்தகைய கடிதங்களை எழுதினார் என்பதையும் இந்திய மக்கள் அறிய வேண்டும்; ஆகையால்தான் இந்த கடிதங்களை தாயார் சோனியா காந்தியிடம் இருந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பெற்றுத் தர வேண்டும் என்றார்.

இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினா மற்றும் ஜவஹர்லால் நேரு இடையேயான உறவு நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன; இருவரும் ஒன்றாக அமர்ந்து உறவாடும் படங்கள், புகை பிடிக்கும் படங்களும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் முதன்மையான அரசியல் தலைவர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியின் வைஷ்ராயின் மனைவி எட்வினாவுடன் நெருக்கமான உறவு பாராட்டியது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது; பலருக்கும் சந்தேகங்களையும் உருவாக்கியது; மவுண்ட்பேட்டன் இந்தியர்கள் மீது ஆதிக்கம் செலுத்த மனைவி எட்வினா மூலம் நேருவுக்கு அழுத்தம் கொடுத்தாரா? என்றெல்லாம் கூட கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் இருவருக்கும் இடையேயான உறவு என்பது புரியாத புதிர்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மவுண்ட்பேட்டன் பிரபு- எட்வினா மகளான பமிலா ஹக்கிஸ் நேரு- எட்வினா உறவு குறித்து பேசியது சர்வதேச கவனம் பெற்றது. பமிலா ஹிக்ஸ் 'டாட்டர் ஆப் எம்பயர்: லைப் அஸ் அ மவுண்ட் பேட்டன்' என்ற புத்தகத்தில்தான் இது பற்றி எழுதி இருந்தார். அதில், மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஷ்ராயாக நியமிக்கப்பட்ட போது எனக்கு 17 வயது. இந்தியாவில் நாங்கள் இருந்த காலத்தில் என் தாயார் எட்வின், நேரு இடையே நெருக்கமான உறவு இருந்தது. எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார விருந்தில் பேசியபோது நேரு இப்படித்தான் கூறினார்.. என் நினைவுகள் உங்களைச் சுற்றியே இருக்கும் என்று.. அதே நேரத்தில் இருவருக்கும் இடையே உடல் ரீதியான உறவுகள் இருந்திருக்குமா? என யோசித்ததும் உண்டு. ஆனால் நேருவுக்கும் எட்வினாவுக்கும் இடையேயான கடிதங்களில் ஆழமான நேசம் இருந்தது மட்டும் உறுதியாக தெரிந்தது; இருவருமே பலராலும் எப்போதும் சூழப்பட்டவர்கள்; அவர்களிடையே உடல் ரீதியான உற்வுக்கு ஒருபோதும் சாத்தியம் இருக்க வாய்ப்பு இல்லை என எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+