தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.. மத்திய அரசு சொன்ன சூப்பர் விஷயம்
டெல்லி: தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆக்ஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின உரையில், "விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, பாரம்பரிய திறன்களுடனோ கருவிகளுடனோ, கைகளாலோ வேலை செய்யும் மக்களுக்கு, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 13 ஆயிரம் ரூபாய் வழங்கவுள்ளோம்" என்று அறிவித்தார்.

PM Vishwakarma : PM Vishwakarma என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இந்த விஸ்வகர்மா திட்டம் 2023 முதல் 2028ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம் : குரு - சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும் கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதையும் ஊக்கப்படுத்துவதே நோக்கம் ஆகும். மேலும் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அவர்களின் பொருட்களை கொண்டுசெல்வதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
வட்டியில்லாத கடன்: பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்கு வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்ட நன்மைகள்: பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெற போகிறார்கள்.

தொழிற் பயிற்சி: மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாவட்டங்கள்: இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் (அவரது பிறந்த நாளில்) தொடங்கி வைக்கப்பட்டது.. தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் விஸ்வர்மா திட்டம்: இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், விஸ்கர்மா திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்யலாம். நேற்று(17.10.2023) வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், நீலகிரி மாவட்டத்தில் 187 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 895பேரும் பதிவு செய்துள்ளார்கள்.தென்மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்தில் 1061 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்திருக்கிறார்கள்.
விஸ்கர்மா திட்டத்தில் பயனாளிகள் தேர்வு எப்படி? : விஸ்கர்மா திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே விஸ்வகர்மா திட்டத்தில்பயன்பெற விரும்புவோர் இசேவை மையங்களில் சென்று திட்டத்தின் பெயரை சொல்லி தேவையான ஆவணங்களை கொடுத்து எளிதாக விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தொழிற் கருவி வாங்க 15000 ரூபாய் நிதி உதவியும். வட்டியில்லாத கடனாக ஒரு லட்சம் வரையிலும் கிடைக்கும். அதை சரியாக திருப்பி செலுத்தினால். இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்பட உள்ளது. எனவே இந்ததிட்டத்தில் இணைந்து சிறு குறு தொழில் முனைவோர் பயன் பெறலாம்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications