ஜனநாயகமா?.. விவசாயிகளை பற்றி பேச பிரியங்காவுக்கு எந்த உரிமையும் இல்லை.. உமாபாரதி காட்டம்
பிரியங்கா காந்தியை உமாபாரதி விமர்சித்துள்ளார்
டெல்லி: விவசாயிகளை பற்றி பேசவும், ஜனநாயகத்தை பற்றி பேசவும் பிரியங்கா காந்திக்கு உரிமையே இல்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாகவே உபியின் லக்கிம்பூர் கலவரம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. 8 பேரை காரை ஏற்றி கொன்றது பல தலைவர்களிடையே கண்டனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி முயன்றார்.. அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலருடன் லக்கிம்பூருக்கு சென்றபோது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தடுப்பு காவல்
இப்போது பிரியங்கா காந்தி தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.. ஆனால், விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்திய அமைச்சரின் மகன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.. அவரை ஏன் கைது செய்யவில்லை என்று பிரியங்கா கேள்வி எழுப்பி வருகிறார்.. அத்துடன், லக்னோ வரும் பிரதமர் மோடி, லக்கிம்பூர் கிராமத்துக்கு வந்து விவசாயிகள் குடும்பத்தாரை சந்திக்க வேண்டும் என்றும் ட்வீட் போட்டு வலியுறுத்தி இருக்கிறார்.

விமர்சனம்
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பிரியங்காவை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து ட்வீட் ஒன்றினையும் அவர் பதிவிட்டுள்ளார்.. அதில், "உபியின் காங்கிரஸ் பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும், மற்ற காங்கிரஸ் தலைவர்களும், நீங்கள் விவசாயிகள் பற்றி பேசுவதற்கு உரிமையில்லை... சுதந்திரத்துக்கு பிறகுதான் விவசாயமும் விவசாயிகளும் பின்னடைந்துவிட்டனர்..

மகாத்மா காந்தி
மகாத்மா காந்தியின் கனவான நாட்டின் முக்கிய பொருளாதாரமான வேளாண் தொழில், பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில்தான் அடியோடு அழிக்கப்பட்டது. இந்த நாட்டில் அவசர நிலையை கொண்டுவந்த காங்கிரஸ் கட்சி, ஜனநாயகம் என்ற வார்த்தையை உச்சரிக்கவே தகுதி கிடையாது.. 10 ஆயிரம் சீக்கியர்களை உயிரோடு எரித்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், அகிம்சையை பற்றி பேசுவதும் சரியில்லை..
Recommended Video

கொந்தளிப்பு
காங்கிரஸ் கட்சியினரும், தலைவர்களும், நல்ல விஷயங்களை, நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி, அதனை வளர்த்து கொண்டு, பிறகு மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு, விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க வேண்டும்'' என்று உமாபாரதி பதிவிட்டுள்ளார்.. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications