இது பல வருட திட்டம்.. இதுதான் சரியான நேரம்.. பிரியங்காவை அழைத்ததன் காரணம் சொல்லும் ராகுல்!
Recommended Video

டெல்லி: பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்கு வருவது பல வருடங்களாக திட்டமிடப்பட்ட ஒன்று என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இதுகுறித்து தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

திடீர் முடிவா?
புவனேஷ்வரில் நடந்த காங்கிரஸ் விழாவில் கலந்து கொண்ட போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை குறித்து பேசினார். அதில், பிரியங்கா அரசியலுக்கு வருவது 10 நாளைக்கு முன் முடிவு செய்யப்படவில்லை. பல வருடங்களுக்கு முன் இதை குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். அப்போதே அவர் அரசியலுக்கு வர வேண்டியது.

சரியான நேரம்
ஆனால் அப்போது அவரின் குழந்தைகள் சிறியதாக இருந்தனர். இதனால் அவர்களை வளர்க்க விருப்பப்பட்டு அவர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இப்போது அவர் அரசியலுக்கு வருவதற்கு சரியான நேரம் என்று தோன்றியதால் அவர் அரசியலுக்கு வந்தார். இது திடீர் என்று எடுக்கப்பட்ட முடிவில்லை.

பெரிய இழப்பு
நாங்கள் அரசியலுக்கு வருவதை குடும்ப அரசியல் என்று எளிதாக கூறி விடுகிறார்கள். நாங்கள் எங்கள் தந்தையையும், பாட்டியையும் இழந்து இருக்கிறோம். நாங்கள் பல கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் பல இழப்புகளை தாண்டி வந்திருக்கிறோம். இதுதான் எங்களை ஒன்றாக இணைத்து இருக்கிறது.

பெரிய பலம்
பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலமாக இருக்கும். உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் அரசியல் மலர பிரியங்கா காந்தி முக்கிய காரணியாக இருப்பார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications