முதல் வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸிங்.. ஒருவேளை பிரியங்காவுக்கு வேற பிளான் வச்சிருக்கா காங்கிரஸ்..!
உத்திரபிரதேச தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
டெல்லி: நேற்று முதல்கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட்டை காங்கிரஸ் தலைமை வெளியிட்டதும், தொண்டர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் சந்தேகம் மாறி மாறி எழுந்து வருகிறது. ரேபரேலியில் சோனியா காந்தி போட்டி என்பது மகிழ்ச்சியை தந்தாலும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரியங்கா காந்தி பெயர் லிஸ்ட்டில் ஏன் இல்லை என்பதே யோசனையாக உள்ளது.
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் அதல பாதாளத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. ரேபரேலி, அமேதி இந்த இரு தொகுதிகள் மட்டும்தான் இப்போதைக்கு கைவசம் உள்ளது.
அதுகூட சோனியாவும், ராகுலும் போட்டியிட்டதால்தான். இல்லையென்றால், இவையும் பாஜகவிடம் என்னைக்கோ போய் சேர்ந்திருக்கும்.

கடைசி நம்பிக்கை
இப்படி நெருக்கடியான நேரத்தில்தான் பிரியங்கா கட்சிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட அவர் கடைசி நம்பிக்கை என்று கூட சொல்லலாம். எக்கு கோட்டையை எதிர்தரப்புக்கு விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதை ஆழமாக உணர்ந்த காங்கிரஸ், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை சமீபத்தில் நியமனம் செய்தது.

15 வேட்பாளர்கள்
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்து "இந்திரா காந்தி திரும்பி வந்துவிட்டார்" என்று போஸ்டர் அடித்து ஒட்டி மகிழ்ந்தார்கள்... கிட்டத்தட்ட உபியே தங்கள் கட்சிக்கு கிடைத்துவிட்டதாகவே நினைத்து பூரித்தார்கள். ஆனால் நேற்றைய தினம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 15 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதில் 11 வேட்பாளர்கள் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுபவர்கள் மற்ற 4 வேட்பாளர்கள் குஜராத்தில் போட்டியிடுபவர்கள் ஆவர்.

ரேபரேலி
சோனியா காந்திக்கு கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லை என்பதால் தீவிரமாக கட்சி பணியில் முன்பு போல் இறங்கவில்லை. அதனால் எப்படியும் இந்த முறை ரேபரேலி பிரியங்காவுக்கு ஒதுக்கப்படும் என்றுதான் நினைக்கப்பட்டது. ஆனால் யாருமே நினைக்காதவகையில் சோனியாவே அங்கு மீண்டும் களத்தில் இறங்க போகிறார் என்பது ஸ்வீட்ஷாக் நியூஸ்!

11 தொகுதிகள்
அப்படியானால் பிரியங்கா காந்தி ஏன் அங்கு நிறுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. 80 தொகுதிகளை கொண்டதுதான் உத்திரபிரதேசம். இப்போதைக்கு வெளிவந்துள்ளது வெறும் 11தொகுதிகள் தான். ஒருவேளை இனி வரும் வேட்பாளர் பட்டியலில் பிரியங்கா பெயர் வெளியாக வாய்ப்பு இருக்கலாம் அல்லது கடைசி நேரத்தில் ரேபரேலி தொகுதியில் சோனியாவுக்கு பிரியங்காவே நிறுத்தப்படலாம் என்றெல்லாம் தெரிகிறது.

கட்சி மேலிடம்
ஏனென்றால் பிரியங்கா தேர்தலில் போட்டியிட மாட்டார், கட்சியின் பொறுப்புகளை மட்டுமே அவர் கவனித்துகொள்வார் என்ற ஒரு விஷயம் சில நாட்களுக்கு முன்பு பேசப்பட்டது. ஆனால் பிரியங்கா காந்தி போட்டியிடும் தொகுதி கட்சி மேலிடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சில காங்கிரஸ் மூத்த தலைவர்களே கூறியுள்ளதால், கண்டிப்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றே நம்பப்படுகிறது.

அரசியல் ஆட்டம்
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! "சிறுபான்மையினர், தலித் அல்லாதவர்கள், ஜாதவ், யாதவ் அல்லாத ஓ.பி.சி.,க்கள்" இவர்கள்தான் பிரியங்காவின் முக்கிய குறி. இவர்களை மையப்படுத்திதான், இவர்களை பிரதானப்படுத்திதான் இந்த அரசியல் ஆட்டத்தையே ஆரம்பித்துள்ளார் பிரியங்கா.

சிறுபான்மை
அதனால் உபி மாநிலத்தின் சூழல், எதிர்தரப்பினரின் நடவடிக்கைகள், சிறுபான்மை, மற்றும் தலித் மக்களின் முக்கிய பிரச்சனைகள், இவைகளையெல்லாம் முன்னெடுத்துதான் பிரியங்காவின் அரசியல் உள்ளதால் கண்டிப்பாக வேட்பாளராக பிரியங்கா பெயர் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications