"மதவாத அரசியலை முன்னெடுங்கள்"..திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சால் சு.வெங்கடேசன் எம்பி ஷாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய பட்ஜெட் குறித்த விவாதத்தின் மீது ஆணித்தரமாக பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தமது உரையை நிறைவு செய்யும் போது, 'மதவாத அரசியலை முன்னெடுங்கள்' என தவறுதலாக பேசியதால் சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

லோக்சபாவில் நேற்று பட்ஜெட் குறித்த விவாதத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். அப்போது சபாநாயகர் இருக்கையில் திமுக மூத்த தலைவர் ஆ.ராசா எம்பி அமர்ந்திருந்தார்

Promote Communal Politics CPI M MP Su Venkatesan Shocks over DMK MP Tamizhachi Thangapandian s Speech

லோக்சபாவில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசியதாவது: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசம் என்பது மண் அல்ல.. மக்கள் என்ற கவிதை முழக்கத்துடன் தொடங்கினார். நானும் சொல்கிறேன்.. திராவிடம் என்பது வெறும் மண், மக்கள் இடம் மட்டும் அல்ல.. கால்டுவெல் அவர்களால் உலகில் மிகவும் குறைவான மூடநம்பிக்கை உடைய மக்கள் திராவிடர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் பெருமைமிகுந்த இடம்; அந்த இனத்தின் பெரும்பான்மையினராகிய இருக்கிற தமிழ்நாட்டு மக்கள் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


எட்டாக்கனி பட்ஜெட்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் 8-வது பட்ஜெட் இது. ஆனால் தமிழ்நாட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை, ஏழை, எளிய வறியவருக்கு இது எட்டாக்கனி பட்ஜெட். சுற்றிலும் தண்ணீர்.. ஆனால் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை.. என்பதை போல இருக்கிறது பட்ஜெட்.


பாராமுக பட்ஜெட்

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் எத்தனை கோரிக்கை விடுத்துள்ளார்.. ஆனால் சுற்றிலும் தண்ணீர் என்பதை போல கூட்டணி கட்சிகள், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வாரி இறைத்துவிட்டு எங்களுக்கு கையை விரித்துவிட்டதால் இது பாராமுக பட்ஜெட்; பாரபட்சமான பட்ஜெட்.


அநீதியான பட்ஜெட் ஏன் தெரியுமா?

கனடாவும் ஜெர்மனியும் தங்களது கணிசமான நிதியை சமூக நல மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு செலவிடுகின்றன. ஆனால் மத்திய பட்ஜெட்டோ, சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை தொடர்ச்சியாக குறைத்து கொண்டே வருகிறது; ஆனால் பெரு நிறுவனங்களுக்கான மானியங்களை வாரி வாரி வழங்குகிறது; சாமானிய மக்களின் வரியை பெரு முதலாளிகளுக்கு மடை மாற்றி விடுகிறது; அதாவது நீதியை அநீதியாக மடைமாற்றம் செய்வதால் அநீதியான பட்ஜெட் என்கிறோம்.


எங்க நிதியை மாற்றியதுதான் அற்பத்தனம்

அண்மையில் மத்திய அமைச்சர் ஒருவர், வரியை அதிகமாக கொடுப்பதாலே நிதியை கொடுங்கள் என தமிழ்நாடு கேட்பது அற்பத்தனமானது என்றார். இது அற்பத்தனமானது என்றால் தமிழ்நாட்டுக்கான நிதியை பீகாருக்கும் உத்தரப்பிரதேசத்துக்கும் திருப்பிவிட்டது அற்பத்தனமானது இல்லையா?
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என எந்த ஒரு பெரிய திட்டமும் இல்லை. தமிழின் தொன்மையை இரும்பின் தொன்மை கொண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் தமிழுக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை மத்திய பட்ஜெட்.


மதவாத அரசியலை முன்னெடுங்கள்- தவறுதலாக பேசிய தமிழச்சி

தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருந்து வருகிற நிலையில் மத்திய அரசு வஞ்சித்தால் என்ன நியாயம்? இந்த சபையின் நடுவே செங்கோலை வைத்துள்ளீர்கள்.. மன்னனை செங்கோல் உருவாக்குவது இல்லை. குணங்கள்தான் உள்ளிருந்து வர வேண்டும். மக்களாட்சியின் மாண்புகளோடு கூட்டாட்சி தத்துவத்தை உணர்ந்து கொண்டு பிளவுவாத அரசியலை விடுத்து மதவாத அரசியலை முன்னெடுங்கள். இவ்வாறு தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசினார்.

அதிர்ந்து போன சு.வெங்கடேசன் எம்பி- திருத்திய தமிழச்சி தங்கபாண்டியன்

மதவாத அரசியலை முன்னெடுங்கள் என தவறுதலாக தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி பேசிய போது பின் வரிசையில் அமர்ந்திருந்த சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்டோர் சற்று அதிர்ந்துதான் போயினர். தாம் தவறுதலாக பேசியதை புரிந்து கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் எம்பியும் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில், கடைசியில் குறிப்பிட்ட மதவாத அரசியலை முன்னெடுப்போம் என்ற வார்த்தை வராமல் எடிட் செய்திருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+