தாக்குதலுக்கு ஆளாகும் காஷ்மீர் மக்கள்.. பல மாநிலங்களில் பதற்றம்.. உதவி எண்களை அறிவித்த சிஆர்பிஎப்!
வெளிமாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக சிஆர்பிஎப் சிறப்பு உதவி எண்களை அளித்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து வெளிமாநிலங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக சிஆர்பிஎப் சிறப்பு உதவி எண்களை அளித்து இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த மிக கொடுமையான தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொலை செய்யப்பட்டனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இதில் பரிதாபமாக பலியானார்கள்.
இந்த சம்பவம் காரணமாக காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்திய ராணுவமும் சிறப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை செய்து வருவதால் மிகவும் பதற்றமான நிலைமை நீடித்து வருகிறது.

தாக்குதல் நடக்கிறது
இந்த தாக்குதலை தொடர்ந்து பல இந்து அமைப்புகள், வலதுசாரி அமைப்புகள் ஜம்மு காஷ்மீரில் வன்முறையில் குதித்தது குறிப்பிடத்தக்கது. பல இஸ்லாமியர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. காஷ்மீரின் பல இடங்களில் இதனால் மிக மோசமான வன்முறை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற நிலை நீடித்து வருகிறது.

காஷ்மீர் மாணவிகள்
அந்த கல்லூரியில் காஷ்மீரை சேர்ந்த மாணவிகள் அதிக எண்ணிக்கையில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் எல்லோரும் உடனே வெளியேற வேண்டும் என்று கூறி, வலதுசாரி அமைப்பினர், கல்லூரியின் பெண் விடுதிக்கு வெளியே போராட்டம் செய்து வருகிறார்கள். இதனால் மாணவிகள் விடுதிக்கு உள்ளேயே அகப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இன்னும் பல இடம்
இது மட்டுமின்றி டெல்லி, மும்பை, பீகார், உத்தர பிரதேசம் என்று பல இடங்களில் இதே போன்ற சூழ்நிலை நீடித்து வருகிறது. பல இடங்களில் காஷ்மீரை சேர்ந்த பணியாளர்களும், மாணவர்களும், மாணவிகளும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். உடனே இவர்களை காஷ்மீரை நோக்கி செல்லும்படி போராட்டங்கள் நடந்து வருகிறது.
|
உதவி
இந்த நிலையில் இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் காஷ்மீரிகளுக்கு உதவ சிஆர்பிஎப் படை முன்வந்துள்ளது. இதுகுறித்து சிஆர்பிஎப் டிவிட்டர் பக்கம் செய்துள்ள டிவிட்டில் ''வெளிமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீர் மக்கள், மாணவர்கள் எங்களை எந்த நேரமும் 14411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது 7082814411 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் துன்புறுத்தப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ எங்களுக்கு தகவல் அளியுங்கள், உதவுகிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications