வேலை கேட்டு வந்த இளம்பெண்ணை வீடியோ காலில் அழைத்து ஆபாசம்.. ஆம் ஆத்மி அமைச்சர் மீது பரபர புகார்
டெல்லி: வேலை கிடைப்பதற்கு உதவி கேட்டு வந்த 21 வயது இளம்பெண்ணை வீடியோ காலில் அழைத்து ஆடைகளை கழற்ற சொல்லி ஆபாச செயலில் ஈடுபட்டதாக பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் சிங் மான் உள்ளார். பகவந்த் சிங் மானின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பல்கர் சிங், வேலை கேட்டு வந்த பெண் ஒருவரை வீடியோ காலில் வரச்சொல்லி ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

பாரதிய ஜனதா யுவமோர்ச்சா தேசிய செயலாளராக இருக்கும் பக்கார், தனது எக்ஸ் தளத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதில், வேலை கிடைக்க உதவி அளிக்குமாறு நாடி வந்த பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாசமாக ஆம் ஆத்மி அமைச்சர் பல்கர் சிங் நடந்து கொண்டதாகவும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி புகைப்படம் ஒன்றையும் காட்டி உள்ளார்.
பக்கார் இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், “21 வயது சகோதரி ஒருவர் பஞ்சாப் அமைச்சர் பல்கர் சிங்கிடம் வேலை கேட்டு அணுகியிருக்கிறார். அந்த பெண்ணை வீடியோ காலில் பேச வருமாறு அழைத்த பல்கர் சிங், உடைகளை கழற்ற சொல்லி, தகாத முறையில் ஆபாசமாக வீடியோ காலில் அத்துமீறியுள்ளார். பல்கர்சிங்கை உடனடியாக கெஜ்ரிவாலும் பகவந்த் மானும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
எடியூரப்பா மீது பாலியல் புகார் அளித்த பெண் திடீர் மரணம்.. போலீசார் சொல்வது என்ன?
மேலும், அமைச்சர் ஆபாசமாக நடந்து கொண்டது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பஞ்சாப் அமைச்சர் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த ஷேஷாத் பூன்வாலா தனது எக்ஸ் தளத்தில் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியை விமர்சிக்கும் காங்கிரஸ், ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் மவுனம் காக்கிறது. கெஜ்ரிவாலும் பகவந்த் மான் சிங்கும் பல்கர் சிங்கை நீக்குவார்களா? ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் தனது மவுனத்தை கலைப்பாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications