‛செக்ஸ்’ டார்ச்சர்.. கல்லூரி பேராசிரியையிடம் ஆபாசம் காட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. டெல்லி ஷாக்
டெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி விசா கேட்டு சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி பேராசிரியைக்கு‛செக்ஸ்' டார்ச்சர் கொடுத்த ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பேராசிரியை பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு புகார் வழங்கி உள்ளார்.
பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண் பல்கலைக்கழகம் ஒன்றில் துறை தலைவராகவும், பேராசிரியையாகவும் உள்ளார். இவர் பிற கல்லூரி, பல்கலைக்கழங்களுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கும் இவர் சென்று வருகிறார். இந்நிலையில் தான் பாகிஸ்தான் செல்ல அவர் விரும்பியபோது தான் ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

பஞ்சாப் பேராசிரியை
பஞ்சாப்பை சேர்ந்த பேராசிரியை கடந்த 2021ம் ஆண்டு பாகிஸ்தான் செல்ல விரும்பினார். பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பல்கலைகழக்கத்துக்கு உரையாற்ற செல்லும் அவர் அங்குள்ள பழங்கால சின்னங்களை பார்க்கவும் விரும்பினார். இதையடுத்து அவர் விசாவுக்காக விண்ணப்பம் செய்தார். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு சென்றார்.

செக்ஸ் டார்ச்சர்
இதையடுத்து தூதரக அதிகாரிகள் அவரிடம் லாகூர் எதற்கு செல்கிறீர்கள் என கேட்டனர். அதற்க அவர், ‛‛பழங்கால நினைவு சின்னங்களை புகைப்படம் எடுத்து அதுபற்றி கட்டுரை எழுத விரும்புகிறேன். மேலும் பல்கலைகழகம் ஒன்றில் பேச உள்ளேன்'' என்றார். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட தயாரானார். இந்த வேளையில் வந்த அதிகாரி, அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். தனிப்பட்ட விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்டுள்ளார். ‛‛ஏன் திருமணம் செய்யவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் எப்படி வாழ்வாய்? பாலியல் ஆசைகளுக்கு என்ன செய்வாய்?'' என கேள்விகள் கேட்டு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் புகார்
மேலும் செல்போன் எண்ணை வாங்கி கொண்டு வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பேராசிரியை பாகிஸ்தான் வெளியுறவுத்துறைக்கு ஆன்லைனில் புகார் அளித்தார். அதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு கடிதம் எழுதினார். அதற்கும் பதில் இல்லை.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இந்நிலையில் தான் பாதிக்கப்பட்ட போராசிரியை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி அந்த பேராசிரியை கூறுகையில், ‛‛2021ல் பாகிஸ்தான் தூதரகத்தில் மிகவும் கசப்பான அனுபவத்தை சந்தித்தேன். என்னிடம் செக்ஸ் ஆசைகள் பற்றி கேள்விகள் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என கூறியுள்ளார்.
-
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications