மனுஷன் கெட்டான் போங்க!.. இந்த செல்லக்குட்டி பப்பிக்கு எம்புட்டு அறிவு?.. வைரல் வீடியோ!
டெல்லி: ஒரு நாய்க் குட்டி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வருவதற்கு முன்பு தனது கால்களை மிதியடியில் துடைத்துக் கொண்டு வரும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
சுத்தம் சோறு போடும் என சொல்வது உண்டு. கூழானாலும் குளித்து குடி, கந்தலானாலும் கசக்கிக் கட்டு என்ற சொல்வடை உண்டு. இது சுத்தத்தை பற்றியதாகும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் அது கடவுள் செய்யும் சேவைக்கு சமானம் என்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் கை, கால்கள், முகம் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கம் இன்றும் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு.

நோய் நொடி
இதன் மூலம் தீய சக்திகள் நம் வீட்டிற்கு நுழைவதை தடுக்கவும், நோய் நொடி இல்லாத வாழ்வை வாழவும் இது உதவும். இதை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சொல்லிக் கொடுத்து அவர்களை பழக்கி விடுகிறோம். அது போல் ஒரு குட்டி பப்பிக்கு இது போன்ற சுத்தப்பத்தமான விஷயங்களை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி
இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. சுமார் 14 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹு போஸ்ட் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அந்த குட்டி பப்பியை பாராட்டி வருகிறார்கள். தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த அந்த குட்டி நாய் வீட்டுக்குள் வருகிறது.

சின்ன பப்பி
அப்போது வீட்டுக்குள்ளே வரும் போது அங்கிருந்த மிதியடியில் தனது பாதங்களை தேய்க்கிறது. அதாவது சார் வெளியே போய்ட்டு வந்தால் கால்களை துடைத்துக் கொண்டுதான் வருவாராம்! சின்ன பப்பிக்கு எத்தனை அறிவு பாருங்க. இந்த வீடியோவை பார்த்த பலர் இதை புத்திசாலி நாய்க் குட்டி என பாராட்டுகிறார்கள்.
|
விலங்கு
இன்னும் சிலரோ நல்ல பையன் என்கிறார்கள். விலங்குகளுக்கு கொரோனாவின் தாக்கம் தெரிகிறது. ஆனால் இந்த மனிதர்களுக்கு இன்னும் புரியாமல் முகக் கவசம் அணிவதைகூட விட்டுவிடுகிறார்கள் என்றார் ஒரு நெட்டிசன். ஒழுக்கமான வளர்ப்பு என இன்னொரு வலைஞர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications