முதல் ஆளாக பின் சீட்டில் இடம் பிடித்த 5 அடி மலைப்பாம்பு.. அதிர்ச்சியில் உறைந்த ஆட்டோ டிரைவர்!
டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாவில் மலைப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத.
டெல்லி: டெல்லியில் ஆட்டோ ரிக்ஷாவின் பின்பக்க இருக்கையில் மலைப்பாம்பு படுத்திருந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டெல்லி துக்ளகாபாத் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இரவு தனது ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். காலையில் எழுந்து வந்து ஆட்டோவை எடுக்கும் போது பின்பக்க இருக்கையில் இருந்து ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது.

ஆட்டோ ஓட்டுனர் என்னவென்று பார்த்தபோது, பின்பக்க இருக்கையில் 5 அடி நீளம் கொண்ட பெரிய மலைப்பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்கள் அமைப்பை தொடர்பு கொண்டு அவர் விஷயத்தை கூறினார்.
இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் இருவர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாம்பை அவர்கள் பிடித்து, பையில் அடைத்து எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்கள் நெரிசல் அதிகம் கொண்ட டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் ஆட்டோவில் மலைப்பாம்பு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications