ரபேல் டீலில் எந்த கேரண்டியும் இல்லை.. பணம் போனால் போனதுதான்.. சிஏஜி அறிக்கையில் வெளியான உண்மை!
ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை மூலம் புலனாகி இருக்கிறது.
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை மூலம் புலனாகி இருக்கிறது.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை இன்று வெளியானது. பல நாட்களாக இந்த அறிக்கை எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ராஜ்ய சபாவில் சிஏஜி தனது அறிக்கையை இன்று தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை விட 2.86% குறைந்த விலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்று சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதே சமயம் இந்த சிஏஜி அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிரான மிக முக்கியமான தகவல் ஒன்றும் அடங்கியள்ளது. அதன்படி ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை மூலம் புலனாகி இருக்கிறது.
பொதுவாக ராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படும் போது மூன்று விதமான வாக்குறுதிகள் அளிக்கப்படும். அதன்படி ஒரே தரத்தில் அனைத்து பொருட்களும் அளிக்கப்படும், வங்கி பரிவர்த்தனை வாக்குறுதி, பொருட்களை சரியாக டெலிவரி செய்யும் உத்தரவாதம், ஆகிய மூன்றும் அளிக்கப்படும்.
ஆனால், மத்திய அரசு செய்த இந்த பிரான்ஸ் ரபேல் ஒப்பந்தத்தில் இந்த மூன்று உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்று சிஏஜி தனது அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.
1. இந்தியாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, பின் பிரான்ஸ் விமானத்தை அளிக்காமல் ஏமாற்றலாம்.
2. விமானத்தின் விலையை பிரான்ஸ் நினைக்கும் போது உயர்த்தலாம்.
3. தரமற்ற விமானங்களை அளிக்க விரும்பினால் அளிக்கலாம்.
4. விமானத்தை டெலிவரி செய்வதில் காலதாமதம் செய்யலாம்.
இதனால், இந்த ஒப்பந்தம் மூலம் ரபேல் விமானம் இந்தியாவிற்கு கிடைக்காமல் கூட போகலாம். சிஏஜி அறிக்கை இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications