தொகுதிகளை இழக்கும் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங்! மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலானால் இதுதான் நடக்கும்
டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்போது, தொகுதிகள் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தங்கள் தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தற்போதுள்ள பல முக்கிய அரசியல் தலைவர்களின் தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படலாம்.

இடஒதுக்கீடு அமலானால், ராகுல் காந்தி, நிதின் கட்கரி போன்ற மூத்த தலைவர்கள் வேறு பொதுத் தொகுதிகளைத் தேட வேண்டியிருக்கும் அல்லது அந்தத் தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியிருக்கும். 543 இடங்களில் சுமார் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது இந்திய நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் பிரதிநிதித்துவத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ராகுல் காந்தி எம்பியாக உள்ள ரேபரேலி தொகுதியில் 47.7% பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர்
லக்னோ - ராஜ்நாத் சிங் - 47.1%
நாக்பூர் - நிதின் கட்கரி - 49.9%
கர்னால் - மனோகர் லால் கட்டார் - 47.3%
கோட்டா - ஓம் பிர்லா - 48.6%
திருச்சூர் - சுரேஷ் கோபி - 52.2%
மண்டியா - ஹெச்.டி. குமாரசாமி - 50.7%
ஹமிர்பூர் - அனுராக் சிங் தாகூர் - 49.3%
அருணாச்சல மேற்கு - கிரண் ரிஜிஜு - 51.7%
திருச்சிராப்பள்ளி - துரை வைகோ 51.2%
இந்த தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்பதால், ஏற்கனவே வெற்றி பெற்ற எம்பிக்கள் அடுத்த முறை பெண் வேட்பாளருக்கு தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு, வேறு தொகுதியை மாற்ற வேண்டியது இருக்கும்.
இது ஒரு உத்தேச ஆய்வு மட்டுமே. அரசு சுழற்சி முறையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ தொகுதிகளைத் தேர்வு செய்யலாம். இருப்பினும், பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டால் இந்த பட்டியல் உண்மையாகக்கூடும்.












Click it and Unblock the Notifications