40,000 பேர்.. டெல்லிக்குள் நுழைந்த ராகுலிலின் யாத்திரை.. பாஜக எதிர்ப்புக்கு நடுவே கொடி பறக்குதா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரவல் தொடர்பான பாஜகவின் எதிர்ப்புக்கு நடுவே ராகுல் காந்தியின் பாரத் ஜேடோ யாத்திரை இன்று காலையில் டெல்லிக்குள் நுழைந்தது.இன்றைய யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்பட பிற கட்சி தலைவர்கள் மட்டுமின்றி மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளதால் காங்கிரஸ் கட்சி உற்சாகமடைந்து, புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது.

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு இமாச்சல பிரதேச மாநில தேர்தல் வெற்றி சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த தேர்தல் வெற்றி கொடுத்த உத்வேகம் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில தேர்தல் பணிகளில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

டெல்லியில் யாத்திரை

டெல்லியில் யாத்திரை

இந்த யாத்திரை 100 நாட்களை தாண்டிய யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானை கடந்துஅரியானாவில் நடந்தது. மொத்தம் 9 மாநிலங்களில் 46 மாவட்டங்களை கடந்து 3000 ஆயிரம் கிலோமீட்டரை இந்த யாத்திரை தொடர்கிறது. இந்நிலையில் தான் 108 வது நாளான இன்று காலை 6 மணிக்கு திலிவாலன் பகுதியில் இருந்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. அதன்பிறகு பதர்பூர் எல்லை வழியாக தலைநகர் டெல்லியை இந்த யாத்திரை அடைந்தது.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

ராகுல் காந்திக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி உள்ளிட்டவர்கள் வரவேற்பு வழங்கினர். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குமரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜேவாலா, சக்திசிங் கோகில், அரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டவர்கள் இருந்தனர். இந்த யாத்திரையின்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கட்சி கொடியை கையில் ஏந்தி உற்சாகமாக அசைத்தனர்.

யாத்திரை செல்லும் ரூட் மேப்

யாத்திரை செல்லும் ரூட் மேப்

அதன்பிறகு மதுரா ரோடு ஜாகீர் உசேன் மார்க், இந்தியா கேட், திலக் மார்க், ஐடிஓ வழியாக ஆசிரமம் சென்று செங்கோட்டை செல்கிறது. அங்கு யாத்திரையின் முதல் பகுதி முடிவடைகிறது. நேதாஜி சுபாஷ் மார்க் வழியாக ராஜ்காட்டுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சென்று தேச தலைவர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். பரத்பூர் எல்லை வழியாக டெல்லிக்குள் நுழையும் ராகுல் காந்தியின் யாத்திரை காலை 10 மணிக்கு ஆசிரமத்தை அடைகிறது. நிஜாமுதீனை மதியம் 12.30 மணிக்கும், இந்தியா கேட்டை 1.30 மணிக்கும், ஐடிஓ பகுதியை 2 மணிக்கும் டெல்லி ெ கேட் பகுதியை 2. 30 மணிக்கும் தர்யாகஞ்ச் பகுதியை 2.45 மணிக்கு அடையும் யாத்திரை மாலை 3 மணிக்கு செங்கோட்டையை அடைகிறது.

40 ஆயிரம் பேர் பங்கேற்பு

40 ஆயிரம் பேர் பங்கேற்பு

இந்த யாத்திரையில் நாளை காங்கிரஸ் கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள், முதல்வர்கள், உள்பட பல மாநில, மாவட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த யாத்திரையில் மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பிற கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யாத்திரையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என டெல்லி போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

பாஜக எதிர்ப்புக்கு நடுவே

பாஜக எதிர்ப்புக்கு நடுவே

சீனாவில் கொரோனா பாதிப்பை அதிகரித்து வரும் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி தனது யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததது. காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கு பொதுமக்கள் ஆதரவு கொடுப்பதை விரும்பாத பாஜக கொரோனாவை கூறி யாத்திரையை தடுக்க முயற்சிக்கிறது என குற்றம்சாட்டியது. மேலும் யாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தான் பாஜகவின் எதிர்ப்பு மத்தியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை டெல்லிக்குள் நுழைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+