சுத்தமான காற்று அடிப்படை உரிமை.. டெல்லி குடிமக்களை குற்றவாளி போல நடத்துவதா.. ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்து அபாய நிலைக்கு சென்றுள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தூய்மையான காற்றை கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்து இழுத்து சென்றனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, குடி மக்களை குற்றவாளிகளை போல நடத்துவதா என்று மாநில பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. சில பகுதிகளில் காற்று மாசின் தரக்குறியீடு 600 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது. அங்கு அபாய கட்டத்தையும் தாண்டி, ரெட்ஜோனுக்கு சென்றுள்ளது. காற்று மாசு காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அடிப்படை உரிமை
டெல்லி காற்று மாசு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு எட்டக் கோரி, நேற்று டெல்லி கேட் முன்பு மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூய்மையான காற்று எங்கள் அடிப்படை உரிமை, உடனடியாக நடவடிக்கை வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர், ராணுவத்தினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தூய்மையான காற்று என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை. நமது அரசியலமைப்பு சட்டத்தின் படி அற வழியிலான போராட்டத்திற்கு குடி மக்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
அக்கறை இல்லாத அரசு
சுத்தமான காற்று வேண்டும் என்று போராடும் குடி மக்களை எதற்காக குற்றவாளிகளை போல நடத்த வேண்டும். காற்று மாசு பிரச்சனையால் கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி, நாட்டின் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
வாக்கு அரசியலை மட்டுமே முன்வைத்து செயல்பட்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதைப்பற்றி துளியும் கவலைப்படவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளை சரிபடுத்த மாநில அரசு துளியும் அக்கறை காட்டவில்லை. தூய்மையான காற்றை கேட்டு போராடும் மக்கள் மீது அதிகாரம் திணிப்பதை விட்டு, இந்த பிரச்சனைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். ராகுலை போல பல தலைவர்கள் போராடிய மக்களுக்கு ஆதரவாகவும், டெல்லி பாஜக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications