எம்பியாகி திரும்பியதும்.. நாடாளுமன்றத்தையே கிடுகிடுக்க வைத்து.. பாஜகவை பதற வைத்த ராகுல் காந்தி
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் எம்பி பதவியை பெற்று நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான உரையில் உருக்கமான மற்றும் ஆவேசமான பேச்சால் லோக் சபாவையே அனல் பறக்க வைத்து இருக்கிறார் ராகுல் காந்தி. அப்படி என்னதான் பேசினார்?
மத்திய பாஜக அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல் உரையாக ராகுல் காந்தி பேச்சு இருக்கும் என்று நேற்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று கவுரவ் கோகாயே உரையை தொடங்கினார். அதன் பின்னர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களே உரை நிகழ்த்தினார்.

இந்த நிலையில் 2வது நாளான இன்று ராகுல் காந்தி பேசுவார் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரைகள் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டதுடன், பெரும் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எம்பி பதவியை இழந்து, மீண்டும் அதை பெற்று மக்களவை திரும்பி இருக்கும் ராகுல் காந்தி என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது. தொடக்கத்தில் உருக்கமாக பேசத் தொடங்கிய அவர், மணிப்பூர் விவகாரம் குறித்த பேச்சை எடுத்தவுடன் உறக்க முழக்கமிட்டார்.
ராகுல் காந்தி தனது உரையில்,
"- சபாநாயகர் அவர்களே.. என்னை மீண்டும் மக்களவையில் அனுமதித்ததற்கு நன்றி. கடந்த முறை நான் பேசி இருக்கும்போது நான் உங்களை காயப்படுத்தி இருப்பேன். காரணம் உங்கள் முத்த உறுப்பினர்களால் எனது பேச்சில் அதானி பற்றி அதிகம் இருந்தது.
- இன்று எனது மனதில் இருந்து நான் பேச உள்ளேன். நான் எப்போதும் செய்வதைபோல் உங்கள் அரசுக்கு எதிராக நான் கடுமையாக பேசப்போவது இல்லை.
- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நான் நடைபயணத்தை தொடங்கினேன். அது இன்னும் முடியவில்லை. அன்பை செலுத்துவதற்காகவே நான் நடைபயம் சென்றேன் என புரிந்துகொண்டேன்.
- என் மனதில் இருந்த வெறுப்பை அகற்றி அன்பையே நிறைத்து இருக்கிறேன். ஒற்றுமை யாத்திரையின் மூலமாக நான் உண்மையான இந்தியாவை பார்த்தேன்.

- விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை அந்த நடைபயணம் மூலமாக உணர்ந்தேன். விவசாயிகள் அனுபவிக்கும் வலிகளை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை.
- ஒற்றுமை இந்தியா நடைபயணம் என்னை மாற்றி உள்ளது. 'இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் இதயத்திற்கே செல்லும்.' என்று கவிஞர் ரூமி எழுதி இருக்கிறார்.
- பிரதமர் மோடி விரும்பினால் நான் சிறை செல்வதற்கு கூட தயாராக இருக்கிறேன். பாஜக ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக அவதூறு, விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறேன். நம்பும் கொள்கைக்காக உயிரை விடுவதற்கும் கூட நான் தயாராக உள்ளேன்.
- இது ஒரு நாடு என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் வெவ்வேறு மொழிகள், சிலர் நிலம், சிலர் மதம், சிலர் தங்கம் மற்றும் வெள்ளி என்று கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் இந்த நாடு என்பது ஒரே குரல். அது இந்த நாட்டு மக்களின் குரல்.
- இந்நாட்டு மக்களுக்கு வலி, துக்கம், சிரமங்கள் உள்ளன. இந்த குரலைக் கேட்க, நம்முடைய அகந்தையை அழிக்க வேண்டும். அப்போதுதான் இந்த இந்தியாவின் குரல் கேட்கும்.
- மணிப்பூர் இனி இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நான் மணிப்பூருக்கு சென்றேன். நமது பிரதமர் இன்று வரை மணிப்பூருக்கு செல்லவில்லை.
- அவர்களை பொருத்தவரை மணிப்பூர் இந்தியாவில் இல்லை. அவர்கள் மாநிலத்தை இரு துண்டாக உடைத்து இருக்கிறார்கள். மணிப்பூர் இன்னும் அமைதியாகவில்லை என்பதே இன்றைய யதார்த்தம்.

- மணிப்பூரில் அவர்கள் இந்தியாவை கொன்றுவிட்டார்கள். அவர்கள் இந்தியாவை இன்று கொன்று இருக்கிறார்கள். நீங்கள் இந்தியாவின் பாதுகாவலர் இல்லை. இந்தியாவை கொன்றவர்கள் நீங்கள்.
- நீங்கள் மணிப்பூரில் இந்தியாவின் குரலை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டார்கள். பாரதம் என்பது என்னுடைய தாய். எனது தாயை நீங்கள் கொலை செய்து உள்ளீர்கள்.
- ராமன் மக்கள் பேச்சை கேட்டார். ராவணன் 2 பேரின் பேச்சை மட்டுமே கேட்டார். பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷா, அதானி ஆகிய 2 பேர் பேசுவதை மட்டுமே கேட்கிறார். அனுமன் இலங்கையை எரிக்கவில்லை. ராவணனின் அகங்காரமே எரித்தது.
- முதலில் மணிப்பூர். தற்போது ஹரியானா. நீங்கள் நாடு முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைக்கிறீர்கள். தற்போது அது தீப்பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது." என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications