டெல்லியில் இடிச்சது வீடுகளை அல்ல.. இந்தியாவின் ஜனநாயகத்தை! ட்விட்டரில் கொந்தளித்த ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : டெல்லி ஜஹாங்கிரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை என்பது இந்திய அரசியலமைப்பு விழுமியங்களை சிதைக்கும் செயலாகும் எனவும், பாஜக அவர்களின் இதயத்தில் உள்ள வெறுப்பை புல்டோஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அன்சார் உள்பட 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டெல்லி ஆக்கிரமிப்பு

டெல்லி ஆக்கிரமிப்பு

இந்நிலையில் வடக்கு டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கிர்புரியில் புல்டோசர்கள் பல கட்டிடங்களை இடித்துத் தள்ளின. உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற கூறிய உத்தரவைத் தொடர்ந்து சில மணிநேரங்களில் அந்த பணியானது நிறுத்தப்பட்டது.

நீதிமன்றம் தடை

நீதிமன்றம் தடை

விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கிய நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிப்பதற்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.

கட்சிகள் கண்டனம்

கட்சிகள் கண்டனம்

டெல்லி மாநகராட்சியின் நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், " பாஜக அவர்களின் இதயத்தில் உள்ள வெறுப்பை புல்டோஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Recommended Video

    இடிக்கப்பட்ட வீடுகள்.. Delhi-யில் நடந்தது என்ன? பரபர பின்னணி
    வெறுப்பை புல்டோஸ் செய்ய வேண்டும்

    வெறுப்பை புல்டோஸ் செய்ய வேண்டும்

    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " டெல்லி ஜஹாங்கிரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை என்பது இந்திய அரசியலமைப்பு விழுமியங்களை சிதைக்கும் செயலாகும் எனவும், பாஜக அவர்களின் இதயத்தில் உள்ள வெறுப்பை புல்டோஸ் செய்ய வேண்டும்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+