கல்வானில் சீனா கொடியேற்றும் வீடியோ.. இப்பவாவது மவுனத்தை கலையுங்க... மோடிக்கு ராகுல் அப்பீல்
டெல்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் புத்தாண்டு நாளில் சீனா கொடியேற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீனா விவகாரத்தில் இப்போதாவது பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
இந்தியா- சீனா இடையே சுமார் 3,500 கி.மீ. வரையறுக்கப்படாத எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. நாட்டின் கிழக்கு லடாக் பகுதிக்கும் சீனாவின் அக்சாய் சின் பகுதிக்கும் இடையே உள்ளது கல்வான் பள்ளத்தாக்கு.

கல்வான் பள்ளத்தாக்கு
கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் இந்தியா, சீனா வீரர்கள் ரோந்து வருவது வழக்கம். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டி இந்தியா சாலைகளை அமைத்து வருகிறது. இது சீனாவை ஆத்திரமூட்டியது. இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் ஊடுருவி இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது.

20 வீரர்கள் வீரமரணம்
கல்வான் பள்ளத்தாக்கில் 2020-ம் ஆண்டு ஜூன் 15,16 ஆகிய தேதிகளில் இரு ராணுவத்தினரிடையே கைகலப்பு மோதல்கள் நிகழ்ந்தன. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா ராணுவ வீரர்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் சீனா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்போது முதல் இருநாடுகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.

சீண்டும் சீனாவின் வீடியோ
இந்நிலையில் புத்தாண்டு நாளில் சீனா ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவின் கொடியேற்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது சீனா. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் வேண்டுகோள்
அதில், கல்வான் பள்ளத்தாக்கில் நமது மூவர்ண கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அவர்களே, இப்போதாவது மவுனம் கலையுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகுல் காந்தி. கடந்த வெள்ளிக்கிழையன்று, அருணாச்சல பிரதேசத்தின் 15 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் சூட்டியிருப்பதை சுட்டிக் காட்டி மத்திய அரசு தெளிவான, கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது என குறிப்பிட்டிருந்தார் ராகுல் காந்தி.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications