42 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பி.எப். வட்டியை குறைப்பதா? நாடு திரும்பிய ராகுல் கொந்தளிப்பு
டெல்லி: 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பி.எப். வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பிஎப் தொகைக்கு தரப்படும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டுக்கு 8.1% வட்டி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் இந்த வட்டி விகிதம் 8.5% ஆக இருந்தது. அதற்கு முன்னர் வட்டி விகிதம் 8.65% ஆக இருந்தது. 2015-16-ம் நிதி ஆண்டில் 8.80%; 2013-14-ம் நிதி ஆண்டில் 8.75% என வட்டி விகிதம் இருந்தது.

இந்த வட்டி விகிதம் குறைப்புக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் மோடி பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்து மக்களின் வருவாயை குறைக்கின்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறார். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தற்போதைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாதிக்கும். நாட்டின் 6.5 கோடி ஊழியர்களின் வாழ்க்கையை சிதைக்கும் நடவடிக்கை. இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி!












Click it and Unblock the Notifications