'பரமாத்மா' அனுப்பி வைத்த மோடிதான் கொரோனா காலத்தில்- ராகுல் காந்தி சரமாரி தாக்கு
டெல்லி: பரமாத்மாவால் அனுப்பி வைக்கப்பட்டவர் என தம்மை பிரகடனப்படுத்திக் கொள்ளும் பிரதமர் மோடிதான் கொரோனா காலத்தில் பாத்திரங்களை அடிக்கவும் டார்ச் லைட் அடிக்கவும் சொன்னவர் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி திடீரென, தாம் உயிரியல் ரீதியாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப் பிறவி அல்ல. என்னை பூமிக்கு அனுப்பியதே பரமாத்மாதான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்துவதற்காக என்னை கடவுள் பூமிக்கு அனுப்பினார். நான் பெற்றுள்ள ஆற்றல் சாதாரண மனிதர்கள் பெற்றிருப்பதைப் போல கிடையாது. கடவுள் ஒருவரால் மட்டுமே இந்த ஆற்றலைத் தர முடியும் என கூறியிருந்தார்.

ராகுல் காந்தி விமர்சனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகவும் விவாதங்களாகவும் தொடர்ந்து வெடித்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சு தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: நரேந்திர மோடி தனது ஜால்ராக்களிடம் பேட்டியில் கூறுகிறார்- நான் உயிரியல் ரீதியாக (பயோலாஜிகளாக) பிறந்தவன் அல்ல. அதாவது, இந்தியாவின் அனைத்து மக்களும், உயிரினங்களும் உயிரியல் சார்ந்தவை, ஆனால் நரேந்திர மோடி உயிரியல் ரீதியானவர் அல்ல என்று.
கொரோனா காலத்தில்.. : மோடி கூறுகிறார்- தன்னை பரமாத்மா அனுப்பினார் என்று. அவருடைய ஜால்ராக்கள் சொல்கிறார்கள் - ஆஹா, வாவ், ஆஹா... எத்தனை அற்புதமான விஷயத்தைச் சொன்னீர்கள் என்று! கொரோனா பெருந்தோற்று காலத்தில் மருத்துவமனை வாசலில் மக்கள் உயிருக்காக போராடிய போது அனைவரையும் தட்டை அடிக்கவும், மொபைலில் டார்ச் அடிக்கச் சொன்னார்.
பரமாத்மா என்ன செய்தார்?: பரமாத்மா எப்படிப்பட்ட மனிதனை அனுப்பினார்? பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி... அதானி மற்றும் அம்பானி கேட்பதை இரண்டு நிமிடங்களில் நிறைவேற்றி வருகிறார் ஆனால் எளிய மக்கள் கேட்பதை துளியும் கண்டுகொள்ள மறுக்கிறார்.
"இந்தியா" கூட்டணி ஆட்சியில்: மோடியும் பாஜகவும் நமது அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கீட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும், "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்தியா கூட்டணி அரசாங்கத்தை அமைத்தவுடன் அரசியலமைப்பு பிரமாணத்தை அவமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications