பிரதமர் மோடியை அதிமுக எம்.பிக்கள்தான் எப்போதும் காப்பாற்றுகிறார்கள்.. ராகுல் காந்தி கடும் தாக்கு!
ரபேல் ஊழலில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பது எல்லோருக்கும் தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக் சபாவில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ரபேல் ஊழலில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பது எல்லோருக்கும் தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக் சபாவில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி கேட்க விடாமல் அதிமுக எம்எல்ஏக்கள் அவரை காப்பற்றி வருகிறார்கள் என்று ராகுல் கூறியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்த தற்போது காங்கிரஸ் கட்சி புதிய விவரங்களை, வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.
இதற்கு மத்தியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரபேல் ஒப்பந்தம் குறித்து லோக் சபாவில் பேசினார். பாஜக மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதிமுகவையும் தனது பேச்சில் கிண்டல் செய்தார்.

ரபேல் பேச்சு
ராகுல் காந்தி தனது பேச்சில், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து இருப்பது எல்லோருக்கும் தெரியும். ரபேல் ஊழலில் பிரதமர் மோடி மீது மக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.126 விமானம் தேவைப்பட்ட போது, ஏன் 26 விமானங்கள் மட்டுமே வாங்கினார்கள். இதற்கான காரணம் என்ன. அதிக விலைக்கு விமானங்களை வாங்கியதன் காரணம் என்ன?

மோடி அம்பானி
ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசும் மோடி, ஏன் ரபேலில் 5 நிமிடம் கூட பேசுவது கிடையாது. ரபேல் ஒப்பந்தத்தை மோடி ஏன் அம்பானியிடம் கொடுத்தார். எச்ஏஎல் நிறுவனத்திற்கு ஏன் இந்த ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. ஏன் தன்னுடைய நண்பர் அனில் அம்பானியிடம் ஒப்பந்தத்தை அளித்தார்.

அதிமுக மீது குற்றச்சாட்டு
அதிமுகவினர் ஏன் இப்போது நான் பேசுவதை தடுக்க பார்க்கிறார்கள். அதிமுகவினர் மோடியை காப்பதற்காக லோக்சபாவில் இடைஞ்சல் செய்கிறார்கள். அதிமுக எம்.பிக்களின் பின்பக்கம் ஒளிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் சிரித்துக் கொண்டுள்ளார், என்றார். ராகுல் பேசிக்கொண்டு இருக்கும் போது அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ ஆதாரம்
மேலும், ரபேல் ஊழலுக்கான ஆடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. நான் அந்த ஆடியோவை இப்போது இங்கு வெளியிட போகிறேன். முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசிய ஆடியோ எங்களிடம் உள்ளது. இப்போது அதை இங்கு வெளியிட இந்த அவை எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினார். ஆனால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications