வாயை கொடுத்து சிக்கிய ராகுல் காந்தி.. லோக்சபா தற்காலிக சபாநாயகர் கொடுத்த பதிலடி - பரபரப்பு
டெல்லி: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளன. இதனால் இன்று லோக்சபாவை பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் இன்று வழிநடத்தினார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர். இந்நிலையில் தான் ராகுல் காந்தி பேசும்போது அவர் பாஜகவில் இருந்தாலும் மனது காங்கிரஸில் தான் இருப்பதாக கூறினார். இதற்கு ஜகதாம்பிகா பால் கொடுத்த ரிப்ளேவால் ராகுல் காந்தி ஷாக்கானார்.
லோக்சபா சபாநாயகராக ஓம்பிர்லா இருந்து வருகிறார். இவர் பாஜகவை சேர்ந்தவர். இவர் லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்று ‛இந்தியா' கூட்டணி எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை நேற்று வழங்கினர்.

இந்த நோட்டீஸ் நிலுவையில் உள்ளது. இதனால் ஓம்பிர்லாவுக்கு பதில் லோக்சபாவை இன்று பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் வழிநடத்தினார். ஓம்பிர்லாவின் இருக்கையில் அமர்ந்து அவர் லோக்சபாவை நடத்தினார்.
முன்னாள் காங்கிரஸ்காரர்
இந்த வேளையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் ஜகதாம்பிகா பாலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான தொடர்பை சுட்டிக்காட்டி பேசினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி, "நீங்கள் (ஜகதாம்பிகா பால்) முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர். அதனால் உங்கள் மீது எனக்கு தனிப்பட்ட பிரியம் உண்டு.
உங்கள் மனம் அங்கே (பாஜக) இல்லை. இங்கே தான் (காங்கிரஸ்) தான் உள்ளது என்பது எங்களுக்கு தெரியும்'' என்று கூறினார். ஜகதாம்பிகா பால் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்ததை சுட்டிக்காட்டி அவரை சீண்டும் வகையில் ராகுல் காந்தி இதனை தெரிவித்தார்.
ஜகதாம்பிகா பால் பதிலடி
இதற்கு ஜகதாம்பிகா பால், ‛‛நான் இங்கு சபையை வழிநடத்தும் தலைவராக இருக்கிறேன். ஆனால், நீங்கள் அங்கே (எதிர்க்கட்சி தலைவராக) உட்கார்ந்திருக்கிறீர்கள். இதற்கு என் ஆலோசனைகளை நீங்கள் ஏற்காதது தான்'' என்று கூறினார்.
இதனை ராகுல் காந்தி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் ஷாக்கானார். இருப்பினும் சிரித்தபடி அவர் ராகுல் காந்தி, ‛‛நாங்கள் நாங்களாவே இருந்து கொள்கிறோம்’’ என்றார்.
யார் இந்த ஜகதாம்பிகா பால்?
அதாவது உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜகதாம்பிகா பால் கடந்த 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் எம்பியாக இருந்தார். இந்திரா காந்தி, சோனியா காந்தி காலத்தில் அவர் முக்கிய தலைவராக காங்கிரஸில் வலம் வந்தார். 1998 ல் உத்தர பிரதேசத்தில் ஒருநாள் முதல்வராக இருந்தார்.
அதன்பிறகு, 2014ல் காங்கிரஸில் இருந்து விலகினார். பாஜகவில் 2014, 1019, 2024 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் டோமரிகஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். 2014ல் அவர் காங்கிரஸ் கட்சியில் லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அப்போதைய சபாநாயகர் மீரா குமாரிடம் வழங்கினார்.
ராகுல் மீது முன்பே விமர்சனம்
அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில் ‛‛நான் காங்கிரஸ் கட்சி மற்றும் எம்பி பதவியில் இருந்து விலகி உள்ளேன். இவ்வளவு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய பிறகும் கூட எனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைக்க முடியவில்லை. காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். காங்கிரஸில் வளர்ந்து வரும் தலைமைக்கு(மறைமுகமாக ராகுல் காந்தி) என்னை போன்ற மூத்த தலைவர்கள் தேவைப்படாமல் இருக்கலாம். மூத்த தலைவர்களால் கருத்துக்களை தெரிவிக்கவும், பரிந்துரைகளை முன்வைக்கவும் முடியவில்லை. எங்களின் ஆலோசனைகளுக்கு யாரும் செவி கொடுப்பது இல்லை. எங்களுக்கு மரியாதை இல்லை.
கட்சி தலைமையுடன் பேசுவதற்கோ அல்லது உரிய மரியாதை பெறவோ முடியாத சூழ்நிலையில் ஒரு கட்சியில் நீடிப்பதில் என்ன பயன்?" என்று கேள்வி எழுப்பி காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போட்டார். இப்படியான சூழலில் இன்று ராகுல் காந்தி மற்றும் ஜெகதாம்பிகா பால் இடையே லோக்சபாவில் காரசாராமான விவாதம் நடந்தது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications