அன்னிய நேரடி முதலீட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. மத்திய அரசுக்கு ராகுல் காந்தி நன்றி
டெல்லி: இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நன்றி கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பை பயன்படுத்தி இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக இந்த முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் 1.01 சதவீத பங்குகளை சீனாவின் மத்திய வங்கி வாங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடந்த 12-ஆம் தேதி ராகுல் காந்தி ட்விட்டர் ஒரு பதிவு போட்டிருந்தார்.
அதில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை கைப்பற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் இந்திய பெரும் நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்னிய நேரடி முதலீட்டு (FDI) கொள்கையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள நாடுகள் அன்னிய நேரடி முதலீடு செய்ய இந்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பதாகும். இதன் மூலம் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கைப்பற்றுவதை தடுக்க முடியும் என்பதாகும்.

இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி பதிவு செய்த ட்வீட்டை மேற்கோள் காட்டி ராகுல் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் என்னுடைய எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றிக் கூறிக் கொள்கிறேன். அது போல் அன்னிய நேரடி முதலீடுகள் அனைத்திற்கு இந்திய அரசின் அனுமதி தேவை என அறிவித்தமைக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications