அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை- ராகுல் காந்தி அப்பீல் மனு டிஸ்மிஸ்! உச்சநீதிமன்றத்தை நாடுகிறார்!
டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்த ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.
2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி பேர்வழிகள் மோடி என்ற பெயர் கொண்டவர்களாகவே இருக்கின்றனர் என்றார். இதற்காக குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த மார்ச் 23-ந் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இதனையடுத்து 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை சூரத் மாவட்ட நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அடுத்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடியானது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும் குஜரத் உயர்நிதிமன்றம் மறுத்தது.
இதனால் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார். உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புதான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலை தொடருகிறது. ஆகையால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ராகுல் காந்தியால் பங்கேற்கவும் முடியாது.
மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 3-ந் தேதி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 13-ந் தேதி விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. ஏப்ரல் 20-ந் தேதி 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.
உயர்நீதிமன்றத்தில் அப்பீல்: இதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மற்றொரு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். இது தொடர்பாக ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்ற விசாரணையின் போது ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் தரப்படவில்லை என அவரது வழக்கறிஞர் அபிஷேக்சிங்வி வாதிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு மே 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராகுல் தரப்பு வாதம் என்ன?: குஜராத் உயர்நீதிமன்றத்தில் மே 2-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கு 3 மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கக் கூடும். அதை ராகுல் காந்தியால் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. மே 4-ந்தேதி கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்த கோடை விடுமுறைக்குப் பின்னர் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.
இறுதித் தீர்ப்பு: இந்த நிலையில் ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று முற்பகல் 11 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என பட்டியலிட்டிருக்கிறது குஜராத் உயர்நீதிமன்றம். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மெகா கூட்டணி அமைத்து வருகின்றனர். இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படக் கூடும் என கூறப்படுகிறது. ஆனால் ராகுல் காந்தி தேர்தலிலேயே போட்டியிட முடியாத நிலை தற்போதுவரை உள்ளது. இன்றைய குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி திரும்ப கிடைக்குமா? தேர்தலில் போட்டியிடுவதற்கான ராகுல் காந்திக்கான தடை விலகுமா? என்பது தெரியும்
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications