டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மினி வில்லேஜ்" செட்அப்.. மொத்தம் 60 கண்டெய்னர்கள்.! பக்காவாக ரெடியான ராகுல் பாத யாத்திரை பிளான்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் ஒற்றுமை பாத யாத்திரையைச் செல்லும் ராகுல் காந்தி, பயணத்தின் போது எங்குத் தங்குவார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2014இல் மத்தியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், அதன் பின்னர் தொடர்ச்சியாகத் தோல்விகளையே சந்தித்து வந்தது. இதனால் காங்கிரஸ் தலைமை மீதான அழுத்தம் அதிகரித்து உள்ளது.

2024 மக்களவை தேர்தல்களுக்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடக்க உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்தினால், அது எதிர்க்கட்சிகளுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.

”அன்றும், இன்றும் ஒரே கோரிக்கை தான்” ராகுல் காந்தியை சந்தித்த அனிதா சகோதரர் பேட்டி! ”அன்றும், இன்றும் ஒரே கோரிக்கை தான்” ராகுல் காந்தியை சந்தித்த அனிதா சகோதரர் பேட்டி!

 காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் பாஜகவுக்கு எதிராகப் பொதுமக்களை ஒன்றிணைக்கும் வகையிலும் காங்கிரஸின் ராகுல் மாபெரும் நடைப்பயணம் மேற்கொள்கிறார். ஒற்றுமை பாத யாத்திரை என்று அழைக்கப்படும் இந்த நடைப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை செல்கிறது. இந்த மாபெரும் பாத யாத்திரை காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் என்றே அக்கட்சி நிர்வாகிகள் பெரிதும் நம்புகின்றனர்.

 பாத யாத்திரை

பாத யாத்திரை

நேற்றைய தினம் இந்த மாபெரும் பாத யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளாக இன்றும் பாத யாத்திரையை ராகுல் காந்தி தொடர்ந்தார். அடுத்த 150 நாட்கள் தொடர்ச்சியாகப் பாத யாத்திரை செல்லும் ராகுல் காந்தி மொத்தம் 3570 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்க உள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைவர்கள் ராகுல் பயணங்களை ஒருங்கிணைக்கின்றனர்.

 கண்டெய்னர்

கண்டெய்னர்

இந்த ஒட்டுமொத்த பயணத்தில் ராகுல் காந்திக்குத் தங்கும் இடங்கள் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது. ராகுல் காந்தி இந்தப் பயணத்தில் எந்தவொரு விடுதியிலும் தங்கப் போவதில்லை. மாறாக இந்த நடைப்பயணத்தில் அவர் கண்டெய்னரிலேயே தங்க உள்ளார்.. அவர் மட்டுமின்றி, அவருடன் பயணிக்கும் அனைத்து காங். தலைவர்களும் கண்டெய்னர்களில் தான் தங்க உள்ளனர்.

 சகல வசதிகள்

சகல வசதிகள்

ராகுலின் இந்த பாத யாத்திரை மொத்தம் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாகச் செல்ல உள்ளது. ஒவ்வொரு நாள் இரவும் ராகுல் ராந்தி உள்ளிட்ட காங். தலைவர்கள் தங்குவதற்கு எனச் சிறப்பு கண்டெய்னர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. படுக்கைகள், டாய்டெல்கள், ஏசிக்கள் எனச் சகல வசதிகளும் உள்ள வகையில் இந்த கண்டெய்னர்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 மினி வில்லேஜ்

மினி வில்லேஜ்

காங். தலைவர்கள் தங்க இப்படி மொத்தம் 60 கண்டெய்னர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த 60 கண்டெய்னர்களும் கன்னியாகுமரியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு அனுப்பப்பட்டன. அங்குச் சிறு கிராமம் போல இந்த கண்டெய்னர்கள் செட்அப் செய்யப்ப்டன. நேற்றிரவு இதில் தான் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஓய்வெடுத்தனர். ஒவ்வொரு நாளும் இந்த கண்டெய்னர்களும் ராகுல் காந்தி அடுத்துச் செல்லும் இடத்திற்கு பேக்-அப் செய்து அனுப்பப்படும்.

 மூத்த தலைவர்கள்

மூத்த தலைவர்கள்

இந்த பாத யாத்திரை முழுக்க ராகுல் காந்தி உடன் பயணிக்கும் மூத்த தலைவர்கள் அவர் அருகிலேயே இருக்கும் வகையில் இந்த செட்அப் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பாத யாத்திரையை எளிய மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் வழியாக ராகுல் காந்தி பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே நட்சத்திர விடுதிகள் வேண்டாம் என்று அவர் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டதாகும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

English summary
Rahul Gandhi to stay in containers during mega rally: Total of 60 containers ready for Rahul gandhi mega rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X