பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்
டெல்லி: ரேப் இன் இந்தியா கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 3 விஷயங்களுக்காக பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
பலாத்கார சம்பவங்களை குறிப்பிட்டுப் பேசிய ராகுல் காந்தி, பலாத்காரங்களின் தலைநகர் இந்தியா என்றும் மேட் இன் இந்தியாவைப் போல ரேப் இன் இந்தியா என்றும் விமர்சித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லோக்சபாவில் பாஜக பெண் எம்.பி.க்கள், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். இதனையடுத்து உடனடியாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.
அப்போது, பலாத்காரங்களின் தலைநகராக டெல்லி மாறிவிட்டது என பிரதமர் மோடி முன்பு பேசியதன் வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டார். மேலும் தமது கருத்து சரிதான் என்றும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறினார்.
Modi should apologise.
— Rahul Gandhi (@RahulGandhi) December 13, 2019
1. For burning the North East.
2. For destroying India’s economy.
3. For this speech, a clip of which I'm attaching. pic.twitter.com/KgPU8dpmrE
அத்துடன் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி 3 விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதில், வடகிழக்கு மாநிலங்கள் பற்றி எரிகின்றன; இந்திய பொருளாதாரம் நிர்மூலமாகிவிட்டது ஆகியவற்றுக்காகவும் பலாத்காரங்களின் தலைநகர் டெல்லி என பேசியதற்காகவும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ராகுல்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications