அதிரடி. அவதூறு வழக்கில் ராகுலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக மன்னிப்பு கோர முடியாது என ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவரது 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தார். இதனால் அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் மோடி பெயர் தொடர்பாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

‛மோடி' என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் எனும் வகையில் அவர் பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் குஜராத் செஷன்ஸ், குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சூரத் நீதிமன்றம் தனக்கு விதித்த 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி தனது பேச்சுக்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. அவர் மன்னிப்பு எதுவும் கோரவில்லை என எதிர்மனுதாரரான பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இதற்கிடையே ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப்பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‛‛அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன். அதே சமயம் தன் மீது உள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்" என தெரிவித்து உள்ளார்.

இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிஆர் கவாய், பிஎஸ் நரசிம்மா, சஞ்சய்குமார் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இதையடுத்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஏன் அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்பட்டது என்ற கேள்விகளை கேட்டனர். மேலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்!












Click it and Unblock the Notifications