அம்பானி, அதானி, எப்ஸ்டீன் பைல்ஸ் பற்றி பேசக்கூடாது.. ராகுல் காந்திக்கு மக்களவை சபாநாயகர் கறார்
டெல்லி: மக்களவையில் எப்ஸ்டீன் பைல்ஸ் குறித்து பேச ராகுல் காந்திக்கு சபாநாயகர் அனுமதி மறுத்திருக்கிறார். அம்பானி, அதானி குறித்தும் ராகுல் காந்தி பேச முயன்ற நிலையில், இருவர் குறித்தும் பேசக்கூடாது என சபாநாயகர் கூறியிருக்கிறார். மீறி பேசினால் அது எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் கூறியிருக்கிறார்.
இருப்பினும் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வெறும் 3 சதவீதமாக இருந்த இந்தியாவிற்கான வரியை தற்பொழுது அமெரிக்கா 18 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனால் பல 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இது வெட்கக்கேடானது என மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்று விட்டீர்கள். எங்களது பாரத மாதாவை அமெரிக்காவுக்கு விற்று விட்டீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்தியா யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. இது எவ்வளவு வெட்கக்கேடான செயல். இந்தியர்களுடைய அத்தனை தரவுகளையும் ஒட்டுமொத்தமாக அமெரிக்காவுக்கு மத்திய பாஜக அரசு விற்றுவிட்டது.
AI தொழில்நுட்பத்தின் பெட்ரோல் நம்முடைய டேட்டா தான். உலகத்திலேயே அதிக டேட்டாக்களை வழங்கும் நாடுகள் இந்தியாவும் சீனாவும்தான். ஏனென்றால் நமது மக்கள் தொகை எண்ணிக்கை அப்படி. ஆனால், இந்த டேட்டாக்கள் எனப்படும் தரவுகள் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.
வெறும் 3 சதவீதமாக இருந்த இந்தியாவிற்கான வரியை தற்பொழுது அமெரிக்கா 18 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இதனால் பல நூறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இது வெட்கக்கேடானது.
எங்களை உங்களது வேலைக்காரர்கள் என்ற மனநிலையில் இருந்து, எங்களிடம் பேச வராதீர்கள் என்று நானாக இருந்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முகத்தின் முன்பாக கூறியிருப்பேன்.
காங்கிரஸ் பார்த்து பார்த்து உருவாக்கிய இந்தியாவின் ஐடி துறை தற்போது ஆபத்தில் இருக்கிறது. லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களின் வேலைகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பெரும் ஆபத்தில் இருக்கிறது" என பேசியிருக்கிறார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications