பரபர கேஸ்கள்..அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்கே மிஸ்ரா பதவி காலம் முடிவு!இடைக்கால இயக்குநர் ராகுல் நவீன்
டெல்லி: அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், தற்போதைய அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்கே மிஸ்ரா பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக இருப்பவர் ராகுல் நவீன். அமலாக்கத்துறையின் புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை ராகுல் நவீன், பொறுப்பு இயக்குநராக செயல்படுவார் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநரான சஞ்சய் மிஸ்ராவின் (சஞ்சய் குமார் மிஸ்ரா) (எஸ்கே மிஸ்ரா) (மிஸ்ரா) பதவி காலம் முடிவடைந்த பின்னர் 3 முறை மத்திய பாஜக அரசு பணி நீட்டிப்பு வழங்கியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-வது முறையாக சஞ்சய் மிஸ்ராவுக்கு இன்னொரு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, ஜெயா தாக்கூர், திரிணாமுல் எம்பி மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி ஆர்.ஆர்.கவாய் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச், அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதமானது. 2021-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் வரும் ஜூலை 31-ந் தேதி வரை மட்டும்தான் எஸ்கே மிஸ்ரா பதவியில் இருக்க வேண்டும். அதற்கு பின் அந்தப் பதவியில் அவர் நீடிக்கக் கூடாது என அதிரடியாக உத்தரவிட்டது.
பின்னர் மத்திய அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை எஸ்கே மிஸ்ராவின் பதவி நீட்டிப்புகாக நாடியது. அப்போது உச்சநீதிமன்றமானது, செப்டம்பர் 15-க்குப் பின்னர் எஸ்கே மிஸ்ரா எந்த நிலையிலும் அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்கவே கூடாது; செப்டம்பர் 15-ந் தேதி நள்ளிரவுடன் எஸ்கே மிஸ்ராவின் பதவிக் காலம் முடிவடைந்ததாக கருதப்படும் என கறார் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து செப்டம்பர் 15-ந் தேதி நள்ளிரவு நெருங்கும் நிலையில் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications