இலங்கை போலீஸ் திடீர் விசாரணை-வீடு திரும்பிய ராஜீவ் காந்தி கொலையாளிகள் ராபர்ட், முருகன், ஜெயக்குமார்!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த கொலையாளிகளான ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று கொழும்பு சென்றடைந்தனர். கொழும்பு விமான நிலையத்தில் இலங்கை போலீசார் 3 பேரிடமும் திடீரென விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விசாரணைக்குப் பின் 3 பேரும் வீடு திரும்பினர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தமிழ்நாட்டில் 33 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தனர் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் . முதலில் தூக்கு தண்டனை கைதிகளாகவும் பின்னர் ஆயுள் தண்டனை கைதிகளாகவும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு சட்டப் போராட்டங்கள், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள், தமிழக மக்களின் போராட்டங்கள், செங்கொடி உள்ளிட்டோரின் தீக்குளிப்பு ஆகியவற்றால் ராஜீவ் கொலையாளிகள் அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலையான ராஜீவ் கொலையாளிகளில் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள். இதனால் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து தங்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கோரி 3 பேரும் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் முடிவாக நேற்று 3 பேரும் சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கை தலைநகர் கொழும்பை 3 பேரும் வந்தடைந்த நிலையில் அங்கு திடீரென போலீசார் 3 பேரிடமும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதனால் கொழும்பு விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் உறவினர்களும் விமான நிலையத்திற்கு வந்து அவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications