டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூடப்பட்ட கதவு.. முப்படை தளபதிகளை சந்திக்கும் ராஜ்நாத் சிங்.. மீட்டிங்.. லடாக்கில் என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

டெல்லி: முப்படை தளபதிகள் உடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை செய்கிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஆலோசனையில் கலந்து கொள்கிறார்.

இந்தியா - சீனா இடையில் கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் நிலவி வருகிறது. கடந்த மே 5ம் தேதி தொடங்கிய மோதல் 4 மாதமாக நீடித்து வருகிறது. இதில் ஜூன் மாதம் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கல்வானில் வீரமரணம் அடைந்தனர்.

அதன்பின் நடந்த சில ஆலோசனைகள் மூலம் எல்லையில் அமைதி திரும்பியது. ஆனால் தற்போது கடந்த ஆகஸ்ட் 29ம் தேதியில் இருந்து லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறி வருகிறது.

சீனாவிடம் இழந்த நிலம்... மீட்கப்படுமா... கடவுளின் செயல் என விடப்படுமா.... ராகுல் கேள்வி!! சீனாவிடம் இழந்த நிலம்... மீட்கப்படுமா... கடவுளின் செயல் என விடப்படுமா.... ராகுல் கேள்வி!!

நேற்று மீட்டிங்

நேற்று மீட்டிங்

இந்த நிலையில் நேற்று இந்தியா சீனா இடையே லடாக் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ இடையே ரஷ்யாவில் இந்த ஆலோசனை நடந்தது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் லடாக்கில் படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. சீனா படைகளை வாபஸ் வாங்குவது தொடர்பாக எதுவும் பேசவில்லை.

இரண்டு நாட்டு படை

இரண்டு நாட்டு படை

நேற்று நடந்த மீட்டிங்கில் 5 உடன்படிக்கைகள் செய்யப்பட்டாலும், இந்த மீட்டிங் பெரிய அளவில் வெற்றியாக பார்க்கப்படவில்லை. எல்லையில் இப்போதும் இரண்டு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்டு படைகளும் இன்னும் எல்லையில் வாபஸ் வாங்கவில்லை. இந்த நிலையில் முப்படை தளபதிகள் உடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை செய்கிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஆலோசனையில் கலந்து கொள்கிறார்.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

இந்தியா - சீனா இடையே நேற்று ரஷ்யாவில் ஆலோசனை நடந்த நிலையில் இன்று மீட்டிங் நடக்கிறது. முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி, விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளும் மீட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள். இன்று நடக்கும் மீட்டிங்கில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். ரஷ்யாவில் நேற்று நடந்த மீட்டிங்தான் இரண்டு நாட்டு பிரச்னையை தீர்க்கும் கடைசி வாய்ப்பாக பார்க்கப்பட்டது.

மூடிய கதவு

மூடிய கதவு

ஆனால் நேற்று எந்த விதமான பெரிய முடிவும் எடுக்கப்படவில்லை. அனைத்து கதவுகளும் தற்போது மூடப்பட்டுவிட்டது. இதனால் தற்போது முப்படை தளபதிகளை ராஜ்நாத் சிங் சந்திக்கிறார். இதில் அஜித் தோவலும் கலந்து கொள்வதால், மீட்டிங் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லையில் தற்போது பதற்றம் நிலவி வருகிறது.லடாக்கில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தற்போது இந்த ஆலோசனை செய்யப்பட உள்ளது.

English summary
Rajnath Singh to meet CDC, Ajit Doval and Chief of all forces today after yesterday Russia meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X