“பெரும்பான்மை இருக்கு.. ஆனா நேரம் இல்லையா?” விஜயின் ஆளுநர் சந்திப்பு தள்ளிப்போனதால் பரபரப்பு!
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தவெக தலைமையிலான ஆட்சி அமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வகையில் விஜய் ஆளுநரை சந்திப்பதற்காகச் சென்ற நிலையில் பாதி வழியிலேயே விஜய் திரும்பியுள்ளார். ஆளுநர் தரப்பில் நேரம் ஒதுக்கப்படாததால் சந்திப்பு தள்ளிப்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, மாநில அரசியலில் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை பெற தவெக தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நேற்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தின. முஸ்லிம் லீக் கட்சி ஆதரவளிப்பதாக கூறியிருந்த நிலையில், ஆதரவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தது. விசிக தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்த சூழலில், பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் வகையில் விஜய் இன்று ஆளுநரை சந்திப்பதற்காக தவெக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். ஆனால், பாதி வழியிலேயே விஜய் தனது பயணத்தை நிறுத்தி திரும்பியதாக தற்போது தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் தரப்பில் நேரம் ஒதுக்கப்படாததால் சந்திப்பு நடைபெறாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால், தவெக தரப்பில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் தமிழக அரசியலில் புதிய கேள்விகள் எழுந்துள்ளன. பெரும்பான்மை ஆதரவு இருந்தும் ஏன் ஆளுநர் சந்திப்பு உடனடியாக நடைபெறவில்லை? அரசியல் ரீதியான ஏதேனும் அழுத்தங்கள் இருக்கிறதா? என்ற விவாதங்கள் சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமடைந்துள்ளன.
-
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications