பாஜககாரங்க உள்ளே வந்தாலே.. விரட்டி அடிக்கும் ராஜபுத்திரர்கள்! உபி, குஜராத்தில் பாஜக ஷாக்.. ட்விஸ்ட்
டெல்லி: ராஜபுத்திரர்கள் பாஜகவினரை துரத்தி துரத்தி அடிக்கின்றனர். அதனால் பாஜக கடுமையான பின்னடைவை லோக்சபா தேர்தலில் சந்தித்து உள்ளது. இதெல்லாம் பாஜகவிற்கு பெரிய பிரஷராகி உள்ளது. என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
பீகார், குஜராத், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை கவலைக்குரியதாக மாறி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்து வாக்குகளால் பெரும்பான்மை இடங்களை வென்ற குஜராத், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை மோசமாக மாறி உள்ளது.

இப்பகுதியில் இப்போது சூழ்நிலைகள் வேகமாக மாறி வருகின்றன. ராஜ்புத் உள்ளிட்ட சில ஆதிக்க சாதியினர் அங்கே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகக் காட்டி பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக ராஜபுத்திரர்கள், தியாகிகள் மற்றும் சைனிகள் உட்பட இந்த ஆதிக்க சாதியினர் குஜராத், உத்தரபிரதேசத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
என்ன காரணம்: ராஜ்புத் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக, அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மனம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர்கள் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.
சமீபத்தில் அங்கு 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது. பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.
பேட்டி; இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்தி ஹார்ட் லேண்டிலேயே பாஜகவிற்கு எதிராக நிலைமை மாறி உள்ளது. ராஜபுத்திரர்கள் பாஜகவிற்கு எதிராக கடுமையாக உள்ளனர். இதனால் ராஜபுத்திரர்கள் இருக்கும் பகுதிகளில் பாஜகவினர் செல்லவே முடியவில்லை. இதனால் இஸ்லாமியர்கள் பற்றி பேச வேண்டிய கட்டாய நிலையில் மோடி இருக்கிறார்.
ராஜபுத்திரர்கள் பாஜகவினரை துரத்தி துரத்தி அடிக்கின்றனர். அதனால் பாஜக கடுமையான பின்னடைவை லோக்சபா தேர்தலில் சந்தித்து உள்ளது. இதெல்லாம் பாஜகவிற்கு பெரிய பிரஷராகி உள்ளது.
2 கட்ட தேர்தலில் பாஜகவிற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் 3ம் கட்ட தேர்தலில் பாஜக இன்னும் மோசமாக பேசும். இன்னும் மோசமாக பிரச்சாரங்களை செய்யும். மிக மோசமாக பாஜக இறங்கி அடிக்கும். நிலைமை அங்கே மோசமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
ஓபிசி பற்றி பாஜக கண்டுகொள்ளவில்லை. அவர்களின் இடஒதுக்கீடு பற்றி பேசவில்லை. இடஒதுக்கீடு போய் விடும் என்ற அச்சம் கூட ஓபிசி இடையே உள்ளது. ஓபிசி மத்தியில் காங்கிரஸ் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. முதல் கட்ட தேர்தலில் இது பாஜகவிற்கு எதிராக மாறி உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
அவர்களுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அல்லது அவர்களின் எக்சிட் போல் ரிப்போர்ட் தெரிவித்து இருக்கலாம். அதனால்தான் பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி என்ற கோஷத்தை நிறுத்திவிட்டனர், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications