Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 ரூபாய் தான் ஊதியம்.. தினக்கூலி டூ ஐஏஏஸ் அதிகாரி.. 8வது முயற்சியில் ராம் போஜன் செய்த சாதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எத்தனை முறை தோற்றாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு ராம் பஜன் ஐஏஎஸ் உதாரணம் ஆவார்.. கூலித் தொழிலாளியாக இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக மாறி உள்ள ராம் பஜன், ஒன்றல்ல , இரண்டல்ல 8 முறை யுபிஎஸ்சி தேர்வினை எழுதி போராடினார். எட்டாவது முயற்சியில் எட்டாத உயரத்தில் இருந்த ஐஏஏஸ் என்ற லட்சியத்தை அடைந்து விட்டார்.

முயற்சி செய்தால் சமயத்துல..முதுகு தாங்கும் இமயத்தையே..மனச இரும்பாக்கனும்..மலையை துரும்பாக்கனும்.. என்று அஜீத் நடித்த தீனா படத்தில் வரும் பாடல் வரிகள்.. ராம் பஜன் ஐஏஎஸ்ஸுக்கு முற்றிலும் பொருந்தும்.. நீ தோத்துட்டா.. தோத்துட்டேன்னு யார் சொன்னாலும் நம்பாதே நீ ஒத்துக்கிற வரைக்கும் தோல்வி கிடையாது என்பதை நிரூபித்துள்ளார் ராம் பஜன்.

 Ram Bhajan ias success story: reviously a labourer and cracked UPSC in his 8th attempt with AIR

ஐஏஎஸ் தேர்வு என்பது பல லட்சம் மாணவர்களின் கனவு.படித்து முடித்த உடன் என்ன ஆவாய் என்று கேட்டால் , பலரும் சொல்லும் வார்த்தை, ஐஏஎஸ்.. ஐபிஎஸ், ஐஎப்எஸ், இந்த மூன்றுமே ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் வழங்கப்படும் பொறுப்பு ஆகும். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெல்பவர்கள் ஐஏஏஸ் ஆக முடியும்.

கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டு UPSC நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற ராம் பஜன் பற்றி இப்போது பார்ப்போம்..

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாபி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த ராம் பஜன் கும்ஹாரா. இவரது தந்தை கொரோனா சமயத்தில் இறந்துவிட்டார். தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். இவரது வீடு அவ்வளவு நல்ல வீடு இல்லை. மிகமோசமான நிலையில் இருந்தது. மிகவும் வறுமையான குடும்பம். ராம் பஜனுக்கோ படிக்க வேண்டும் என்று வெறி இருந்தது. வறுமையை விரட்ட தொடர்ந்து படித்தார். படித்துக் கொண்டே குடும்ப சூழ்நிலை காரணமாக தனது தாயுடன் சேர்ந்து தினக் கூலியாக வேலை செய்து வந்தார்.

 Ram Bhajan ias success story: reviously a labourer and cracked UPSC in his 8th attempt with AIR

பல மணி நேரம் கற்களை உடைப்பதும், உடைத்த கற்களை அவரது தாயார் சுமந்து செல்வதும் நடந்து வந்தது. அப்படி வேலை செய்தாலும் தினக்கூலியாக 10 ரூபாய் தான் கிடைக்கும். ஒரு வேளை சாப்பாடு கூட நன்றாக சரியாக சாப்பிட முடியாத நிலை இருந்திருக்கிறது. இப்படி பல சவாலான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் வெற்றியை நோக்கி பயணத்தை தொடங்கினார்,

அவரது இலக்காக இமயம் இருந்தது. ஆம்..ஐஏஎஸ் என்ற இலக்கை முன்வைத்து படித்தார். யுபிஎஸ்சி தேர்வு எழுதினார். ஒருமுறைஅல்ல. இருமுறை அல்ல.. 7 முறை எழுதினார். ஏழு முறையும் தோற்றார். ஆனாலும் விடாமல் எழுதி எட்டாவது முயற்சியில் நாடே பாராட்டும் வண்ணம் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றுள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் ராம் பஜன் 667வது ரேங்க் உடன் வெற்றி பெற்று ஐஏஏஸ் ஆக மாறி உள்ளார். தினக்கூலியாக பயணித்து வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராம் பஜனின் இந்த பயணம் பலருக்கும் வழிகாட்டியாக மாறி உள்ளது.

2000 ஆண்டு என்று நினைக்கிறேன்.. அப்போது தமிழ் நாளிதழ்களில் புவியியல் பாடத்தில் டாப் இடம் பிடித்த வீரபாண்டியன் ஐஏஏஸ் படித்து என்னவாக போகிறாய் என்று கேட்டார்கள். அவரை ஐஏஏஸ் ஆவதே லட்சியம் என்றார். அவரை பற்றி சொல்ல காரணம் . குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் போது பள்ளி முடிந்ததும் மாலை 4 மணி முதல் 11 மணி வரையில் புரோட்டா கடையில் வேலை பார்த்து வந்தார்.

அவர் பட்டப்படிப்பு முடித்து 2009ம் ஆண்டு IAS தேர்வில் இந்திய அளவில் 53வது இடம் பிடித்து மாவட்ட கலெக்டராக மாறினார். ஆந்திர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இதுபோல் பல ஐஏஏஸ் அதிகாரிகள் வறுமையை வென்று வெற்றி பெற்றவர்கள் தான். அரசு பள்ளியில் படித்து, கலெக்டரான பலர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாவட்ட ஆட்சியர்களாக இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+