"ராம்".. பாஜக அஸ்திரத்தை எடுத்து.. பாஜக மீதே வீசிய ராகுல் காந்தி.. எதிர்பாராமல் அதிர்ந்து போன தாமரை!
டெல்லி: இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ராமர் குறித்தும் ராவணன் குறித்தும் பேசியது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் காங்., எம்.பி., ராகுல்காந்தி பேசினார். அதில், மணிப்பூர் அகதி முகாமில் ஒரு தாய், தன்னுடைய மகன் சடலத்துடன் ஒருநாள் முழுவதும் படுத்திருந்தேன் என தெரிவித்தார். நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை.

அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது.
பாஜகவினர் பாரதமாதாவின் காவலர்கள் அல்ல, மாறாக அவளை கொலை செய்த கொலைகாரர்கள். இந்தியா என்ற கருத்தோட்டத்தை மணிப்பூரில் அழித்துவிட்டனர். நாடு முழுவதும் நான் மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை நடைபயணம்' இன்னும் நிறைவடையவில்லை.
நடைபயணத்தின்போது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்; விவசாயிகளின் வலியை பிரதிபலிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீங்கள் தேச துரோகிகள்.. தேச பக்தர்கள் இல்லை, என்றார்.
குறுக்கீடு: இதையடுத்து ராகுல் காந்தி பேச்சை குறுக்கிட்டு பாஜக தலைவர்கள் பேசினர். அவரை பேச விடாமல் கடுமையாக தொடர்ந்து பேசினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தியை பேச விடாமல் தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர்.
இதையடுத்து அவர்களை சபாநாயகர் அமர வைத்த பின்னர் ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார். அப்போது, ராவணனைப் போல பிரதமர் மோடி 2 பேர் சொல்வதை மட்டும் கேட்கிறார்; ஹனுமான் இலங்கையை எரிக்கவில்லை. ராவணனின் ஆணவம்தான் இலங்கையை எரித்தது.
சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். ஆனால் பிரதமர் மோடி இன்று வரை செல்லவில்லை. ஏனென்றால் மணிப்பூர் இந்தியாவில் இல்லை என அவர் நினைக்கிறார். நான் பேசும்போது மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் உண்மையில் மணிப்பூரில் எதுவுமே இல்லை. நீங்கள் மணிப்பூரை இரண்டு துண்டுகளாக துண்டாக்கி உள்ளீர்கள். மணிப்பூரை பிரித்து உடைத்து உள்ளீர்கள், என்று ராகுல் காந்தி கூறினார். பொதுவாக ராமர் பற்றி பாஜக பேசும். ஆனால் இன்று அதே அஸ்திரத்தை ராகுல் காந்தி எடுத்துள்ளார்.
என்ன நடக்கிறது? பின்னணி: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்., சார்பில் அசாம் மாநில எம்.பி., கெளரவ் கோகாய் மீண்டும் முன்மொழிந்து நேற்று உரையை தொடங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்., எம்.பி., ராகுல்காந்தி தொடங்கி வைத்து பேசுவதாக இருந்தது. ஆனால் ராகுல் நேற்று பேசவில்லை. இதையடுத்து இன்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மொத்த நாடாளுமன்றத்தையும் உலுக்கி உள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications