ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்!
டெல்லி: ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கோரி பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில் மத்திய பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது.

சேது சமுத்திர திட்டமானது தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ராமர் பாலத்தை இடித்து சேதுக் கால்வாய் திட்டம் அமைப்பதாக கூறி மத்திய அரசு இத்திட்டத்தை கைவிட்டது.
இதனைத் தொடர்ந்து ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் மத்திய பாஜக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசும் ராமர் பாலம் தொடர்பாக பதிலளிக்க தொடர்ந்து கால அவகாசம் கோரியிருந்தது. இன்றும் இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச்சிடம் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார். அப்போது மத்திய அரசு தரப்பில், ராமர் பாலம் குறித்த வழக்கில் பிரமாண பத்திரம் தயாராக உள்ளது. துறைசார் இலாகாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், பிப்ரவரி முதல் வாரத்தில் பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்திவைத்தது.
ராமர் பாலத்தை முன்வைத்துதான் சேது சமுத்திர திட்டம் அல்லது சேது கால்வாய் திட்டம் முடக்கப்பட்டது. அண்மையில் மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில், ராமர் பாலம் என்பது இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முட்டுக்கட்டை நீங்கியது. இதனை சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலினும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரும் தீர்மானத்தை முதல்வ மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இத்தீர்மானத்தை தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் வரவேற்பதாக பேசினார். அதிமுகவும் வரவேற்றது. இதையடுத்து சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரும் தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் ராமர் பாலம் வழக்கும் விசாரணைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications