எவ்வளவு தைரியம் இருந்தா.. விரலை நீட்டி சோனியாவை மிரட்டிய ஸ்மிருதி இரானி.. காங்கிரஸ் பரபர விளக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சோனியா காந்தி இடையே மோதல் நடந்துள்ளது. இந்நிலையில் ஸ்மிருதி இரானி, சோனியா காந்தியை நோக்கி விரலை நீட்டி, ‛‛எவ்வளது தைரியம் உள்ளது. இது உங்கள் கட்சி அலுவலகம் அல்ல'' எனக்கூறியதோடு, ‛‛நான் யார் என்று உங்களுக்கு தெரியாது'' என மோசமான தொனியில் பேசினார் என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. எம்பியான இவர் நாடாளுமன்ற லோக்சபாவில் காங்கிரஸ் குழு தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் டெல்லியில் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலம் செல்வதாக தெரிவித்தார். இந்த வேளையில் அவர் ‛‛ராஷ்ட்ரபத்னி'' எனும் வார்த்தையை பயன்படுத்தினார். ஹிந்தியில் ஜனாதிபதி மாளிகையை ராஷ்ட்ரபதி பவன் எனும் கூறும் நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ராஷ்ட்ரபத்னி என கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‛‛நான் வாய்த்தவறி கூறிவிட்டேன்'' என விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் அமளி
இருப்பினும் பாஜகவினர் விடவில்லை. ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவமரியாதை செய்யும் வகையில் தரக்குறைவான வார்த்தையை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பயன்படுத்தியதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர். இது நேற்று நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் பூதாகரமாக வெடித்தது. லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேசினார். அப்போது, ‛ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என ஆக்ரோஷமாக கூறினர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில்,‛‛ பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தும் வகையில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி பேசியுள்ளார். நீங்கள்(சோனியா காந்தி) திரெளபதி முர்முவை அவமானப்படுத்த அனுமதித்துள்ளீர்கள். இதனால் மன்னிப்பு கோர வேண்டும்''என விமர்சனம் செய்திருந்தார். அமளி ஏற்பட்டதால் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

‛என்னுடன் பேச வேண்டாம்’ என்ற சோனியா
இந்த இடைவேளையில் சோனியா காந்தி, பாஜகவின் எம்பி ரமாதேவியை சந்தித்து பேசினார். அப்போது, ‛‛இந்த விஷயத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கனவே மன்னிப்பு கேட்டுவிட்டார். இதில் என்னை ஏன் இழுக்கின்றனர்'' என கேள்வி எழுப்பினார். அப்போது ஸ்மிருதி இரானி குறுக்கீட் பேச முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சோனியா காந்தி, ‛‛என்னுடன் பேச வேண்டாம்'' என மிகுந்த கோபத்துடன் கூறியதாக தகவல்கள் வெளியாகியது. இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறுகையில், பாஜக எம்பிக்களை மிரட்டும் வகையில் சோனியா காந்தி செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

அவதூறான வார்த்தைகள் பேசிய ஸ்மிருதி இரானி
இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதமாகி உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்பியும், கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொதுச்செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛சோனியா காந்தி பாஜக எம்பி ரமா தேவியிடம் பேசிக் கொண்டிருந்தார். சோனியா காந்தியிடம் வந்த ஸ்மிருதி இரானி மிகவும் தரக்குறைவான வகையில் மோசமான தொனியில் அவதூறான வார்த்தைகளில் பேசினார். அதற்கு சோனியா காந்தி, ‛‛நான் உங்களிடம் பேசவில்லை. இன்னொருவரிடம் பேசுகிறேன்'' என்றார். அதற்கு ஸ்மிருதி இரானி, ‛‛நான் யார் என்று உங்களுக்கு தெரியாது'' எனக்கூறி கூச்சலிட்டார்.

விரலை நீட்டி பேசிய ஸ்மிருதி இரானி
அதோடு சோனியா காந்தியை நோக்கி விரலை காட்டிய ஸ்மிருதி இரானி "எவ்வளவு தைரியம் உள்ளது. இப்படி நடந்து கொள்ளாதீர்கள். இது உங்கள் கட்சி அலுவலகம் அல்ல'' என கூறியதாக அங்கு இருந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூறினர். இது என்ன மாதிரியான நடத்தை?. ஒரு எம்பி, சக எம்பியிடம் பேசக்கூட முடியாதா? ஸ்மிருதி இரானி தனது கருத்தை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தலாம். மூத்த எம்பி மற்றும் கட்சி தலைவருடன் ஏன் இவ்வளவு கேவலமான அணுகுமுறையை எடுக்கிறார்?. '' என்று கூறியுள்ளனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications