கொரோனாவை நீக்கும் வல்லமை படைத்ததா சிவப்பு எறும்பு சட்னி?.. ஆய்வுகள் கூறுவது என்ன?
டெல்லி: சிவப்பு எறும்பு சட்னி எந்த வகையில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1 கோடியை தாண்டிவிட்டது. மக்கள் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். யார் என்ன சொல்கிறார்களோ அதை சிறிதும் முன் யோசனையின்றி அவர்கள் செய்கிறார்கள்.
இந்த நிலையில் ஒடிஸா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் சிவப்பு எறும்பு சட்னியை தங்கள் உணவில் சேர்த்து வருகிறார்கள். சிவப்பு எறும்புகளை பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து சட்னி போல் தயாரிக்கிறார்கள்.

சளி, இருமல்
அவ்வப்போது வரும் காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக இந்த சிவப்பு எறும்பு சட்னியை அந்தப் பகுதி மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த சிவப்பு எறும்பு சட்னி கொரோனா வைரஸை எதிர்க்கும் செயல்திறனை கொண்டிருப்பதாக நயாதர் பதியால் எனும் ஒரு பொறியாளர் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.

கால்சியம்
சிவப்பு எறும்பு சட்னியில் ஃபார்மிக் அமிலம், புரதம், கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், இரும்பு சத்துகள் இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக பதியால் தெரிவித்திருந்தார். இதனால் ஒடிஸா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர் , ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சிவப்பு எறும்பு சட்னியை உணவில் சேர்ப்போருக்கு கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

கவுன்சில்
அவரது பரிந்துரையின்படி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத வகையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் பதியால் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்குமாறு ஆயுஷ் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிவப்பு எறும்பு சட்னி
கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் சிவப்பு எறும்பு சட்னியும் இடம்பிடிக்குமா என்பது ஆராய்ச்சியின் முடிவுகளில்தான் தெரியவரும். இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் கூறுகையில் சிவப்பு எறும்பு சட்னி கொரோனாவை குணப்படுத்தாது. வாட்ஸ் ஆப்பில் வரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications