‛‛ஹேமமாலினி பற்றிய சர்ச்சை’’.. காங்கிரஸின் சுர்ஜேவாலா பிரசாரம் செய்ய தடை! தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா பிரசாரம் செய்ய 48 மணிநேரம் தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.
நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் ஹேமமாலினி. இவர் பாஜகவில் செயல்பட்டு வருகிறார். உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதி எம்பியாக ஹேமமாலினி உள்ளார். இந்த தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் ஹேமமாலினி பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது மீண்டும் ஹேமமாலினிக்கு மதுரா தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி உள்ளது. இந்த தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பெற ஹேமமாலினி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், பாலினி பாகுபாட்டை காட்டும் வகையிலும் ரன்தீப் சுர்ஜேவாலா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக பாஜக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து விளக்கம் கேட்டு ரன்தீப் சுர்ஜேவாலாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி இருந்தது.
தமிழகத்தில் சறுக்கும் திமுக கூட்டணி! அதிமுகவை விட அதிக இடங்களை அள்ளும் பாஜக.. NEWS X கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் ஹேமமாலினி குறித்து ரன்தீப் சுர்ஜேவாலா கூறிய கருத்து என்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி இன்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதாவது இன்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணிநேரத்துக்கு ரன்தீப் சுர்ஜேவாலா பிரசாரம் செய்ய தடை விதித்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ரன்தீப் சுர்ஜேவாலா நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் பிரசாரம் செய்யமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications