சிவப்பு கம்பளம்.. குடியரசு தினவிழாவை காண இன்று இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர்.. ஜெய்ப்பூரில் வரவேற்பு
டெல்லி: நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இன்று டெல்லி வருகை தர உள்ளார்.. அவரை வரவேற்க ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக ரோட்ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும், டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும்... இந்த அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.

அழைப்பு: அந்தவகையில், வருகிற ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா அதிபர் ஜோ பிடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவரால் ஜனவரியில் இந்தியா வர முடியாத சுழல் உள்ளதால், மறுத்துவிட்டார்.
இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அழைப்பை ஏற்றுக் கொண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறியிருக்கிறார். இந்த தகவலை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
அந்தவகையில், நாளை நடக்க போகும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் பங்கேற்க போகிறார். இதற்காக இன்றைய தினம் இந்தியா வருகிறார்.. இதன் வாயிலாக, சிறப்பு விருந்தினராக பங்கேற்கும், பிரான்சைச் சேர்ந்த 6வது அதிபர் என்ற சிறப்பை அவர் பெறுகிறார்
ஆம்பர் வருகை: டெல்லி வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆம்பர் கோட்டைக்கு வருகை தந்து, ஜெய்ப்பூரில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். பின்னர், ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் ஆகியவற்றை பிரான்ஸ் அதிபர் பார்வையிடுகிறார்.. அப்போது அவருக்கு இந்தியா சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது..
நாளை 75- வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதுடன், நடக்க போகும் அணிவகுப்பை காணவுள்ளார் அதிபர்.. இந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவக்குழுவும் பங்கேற்க உள்ளது ஹைலைட்டான சமாச்சாரமாகும்.
பங்கேற்பு: இப்படித்தான் கடந்த வருடம் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டு பேஸ்டில் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார்.. அந்த அணிவகுப்பிலும் இந்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்றிருந்தனர்.. இதற்கு பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் வந்திருந்தார்.
அப்போது இந்தியா- பிரான்ஸ் இடையேயான பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், 2 நாடுகளுக்கும் இடையே நல்லுறவு தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இன்று பிரான்ஸ் அதிபர் இந்தியா வந்துள்ளது, கவனிக்கத்தக்க வகையில் அமைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications