ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கூடுதல் இலவச வசதிகள்..மத்திய அரசு திருத்தம்
டெல்லி: நாட்டில் ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழங்கப்படும் இலவசங்கள் தொடர்பான அறிவிக்கையில் மத்திய அரசு திருத்தங்கள் செய்துள்ளது. இதனடிப்படையில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பங்களா கிடைக்கும்.
நாட்டில் பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்குவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இலவசங்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பல கருத்துகளை தெரிவித்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமையுடன் என்.வி.ரமணா பணி ஓய்வு பெற்றார். அப்போது இலவசங்கள் தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டது. அதில் ஓய்வு பெறும் தலைமை நீதிபதிக்கு 6 மாதம் இலவச பங்களா உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சகம் இந்த அறிக்கையில் திருத்தங்களை செய்துள்ளது. இதன்படி ஓய்வு பெறும் தலைமை நீதிபதிக்கு இலவச பங்களா 6 மாதம் வழங்கப்படும்; ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு 24 மணிநேர பாதுகாவலர்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுவர்.
தலைமை நீதிபதி/ ஓய்வு பெறும் நீதிபதி செல்போன், தொலைபேசி கட்டணங்கள்- இணையவசதிகளை மாதம் ரூ4,200க்குள் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த கட்டணமும் வீட்டு பணியாளர், ஓட்டுநர், உதவியாளருக்கான ஊதிய செலவுகளும் உச்சநீதிமன்றம்/ உயர்நீதிமன்றங்களின் செலவுகளாகுமாம். ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிக்கு இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ70,000. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ39,000.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications