டெல்லியில் ரூ. 7200 கோடி சொகுசு குடியிருப்புகள்! பட்டென விற்று தீர்ந்தது! வாங்கியது யார் தெரியுமா
டெல்லி: தலைநகர் டெல்லி அருகே 7200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சொகுசு குடியிருப்புகள் வெறும் சில நாட்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பரான டிஎல்எஃப் நிறுவனம் டெல்லிக்கு அடுத்துள்ள குருகிராம் பகுதியில் அமைந்துள்ள புதிய ரியல் எஸ்டேட் பிராபர்டியை விற்றுள்ளன.

865 மில்லியன் டாலர், அதாவது சுமார் 7200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த சொகுசு விடுதிகள் அனைத்தும் சில நாட்களில் விற்று தீர்ந்துள்ளது.
டிஎல்எஃப் நிறுவனம்: இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட் நிறுவனம் தான் இதை ரெடி செய்துள்ளது. குருகிராமில் 1,113 சொகுசு குடியிருப்புகளை டிஎல்எஃப் நிறுவனம் கட்டிய நிலையில், வெறும் மூன்றே நாட்களில் இவை அத்தனையும் விற்றுத் தீர்ந்துள்ளது. இதில் மொத்தம் ஏழு டவர்களில் 4 பெட்ரூம் குடியிருப்புகள் மற்றும் பென்ட்ஹவுஸ் இருக்கும் நிலையில், அவை அனைத்தும் படுவேகமாக விற்றுத் தீர்ந்துள்ளன. இதை டிஎல்எஃப் நிறுவனமே உறுதி செய்துள்ளது.

கூகுள் மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் குருகிராமில் தங்கள் அலுவலகத்தை வைத்துள்ளன. இதனால் லட்சங்களில் சம்பளம் வாங்கும் பலரும் இப்பகுதியில் தான் வசித்து வருகிறார்கள். இங்கே ஏழு டவர்களில் சுமார் 116 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு தான் சில நாட்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.
பங்குகள் அதிகரிப்பு: இந்தியாவில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இருந்தாலும் கூட நாட்டின் டாப் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக டிஎல்எஃப் நிறுவனம் இருக்கிறது. இதன் பங்குகள் கடந்த ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008க்குப் பிறகு டிஎல்எஃப் பங்குகள் இந்தளவுக்கு உயர்வது இதுவே முதல்முறை.. டிஎல்எஃப் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தை பெஞ்மார்க் சென்சக்ஸை காட்டிலும் 18% அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.. நமது நாட்டில் அதிக வருமானம் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ஆடம்பரக் கார்கள் முதல் விலையுயர்ந்த வீடுகள் என அனைத்தின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டே இந்த டி.எல்.எஃப் நிறுவனத்தின் மெகா விற்பனையாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகள்: பிரீமியம் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் தேவையும் விற்பனையும் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இதுபோன்ற சொகுசு குடியிருப்பு திட்டங்களைத் தொடங்க ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து உயரும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வாங்கியது யார்: பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் கூட லோன் போட்டு இதுபோன்ற சொகுசு குடியிருப்புகளை வாங்குவதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். சொகுசு குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், விற்பனையில் டிஎல்எஃப் நிறுவனம் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. முதலில் ஒரு நபருக்கு ஒரு யூனிட்டை மட்டுமே டிஎல்எஃப் விற்கிறது. அதேபோல புக்கிங் தொகையையும் 5 மடங்கு உயர்த்தியது. ஆனாலும், கூட சில நாட்களில் இது விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை இல்லை: கடந்த ஆண்டும் கூட டிஎல்எஃப் நிறுவனம் இதேபோல சுமார் $1 பில்லியன் அதாவது 8300 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளை மூன்றே நாட்களில் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் $500 மில்லியன் அதாவது 4000 கோடி ரூபாய் செலவில் குடியிருப்புகளை விற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications