ஒலியை விட 3 மடங்கு வேகம்! துல்லிய தாக்குதல்.. 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையில் மாஸ் காட்டும் இந்தியா
டெல்லி: இந்திய ராணுவத்தின் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இன்று சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய ராணுவம் என்ற வரிசையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆசியாவை பொறுத்த அளவில் இந்திய ராணுவம் இரண்டாவது பெரிய ராணுவமாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு நாளும் புதியதாக ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இது நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பிரமோஸ் வகை ஏவுகணைகள் இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையை வடிவமைத்தன. ஆனால், தற்போது இந்தியா தனித்தன்மையுடன் இதனை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மணிக்கு 3000 கி.மீ வேகத்தில் சீறி பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணைகளுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் இதனை பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஏவுகனைகளை உக்ரைனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை கேட்டு இந்தியாவுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

மறுபுறம் இன்று 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணையை இந்தியா அந்தமான் நிகோபர் தீவு பகுதியில் வெற்றிகரமாக இன்று சோதனை செய்திருக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் இது பயணிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் துல்லியமாக எத்தனை கி.மீ வேகத்தில் இது பயணிக்கும்? எவ்வளவு தூர இலக்கை தாக்கும் என்கிற விவரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போதைய சூழலில் செங்கடல் பகுதி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. அந்த வழியாக போகும் சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு வரும் கப்பல்களும், இந்தியாவிலிருந்து செல்லும் கப்பல்களும் இதில் அடங்கும். எனவே, செங்கடல் பகுதியில் இந்தியா தனது பிடியை இறுக்க இந்த ஏவுகணை உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications